Skip to content

சொல் பொருள்

(பெ) 1. கடப்பாரை, 2. பசு முதலியவற்றின் பால் மடி, 3. ஒரு கொடி,காய், சுரைக்கொடி, சுரைக்காய், 4. துளை, 5. மூங்கிற்குழாய், 6. பூண், 7. குழிவு

சொல் பொருள் விளக்கம்

1. கடப்பாரை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

sharp crow-bar, udder, bottle gourd, its creeper, cavity, bamboo tube, ferrule, hollow interior

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

உளி வாய் சுரையின் மிளிர மிண்டி – பெரும் 92

உளி(போலும்) வாயைக் கொண்ட கடப்பாரையால் குத்திப் புரட்டி

செ வரை சேக்கை வருடை மான் மறி
சுரை பொழி தீம் பால் ஆர மாந்தி – குறு 187/1,2

நேர்க்குத்தான மலையில் வாழும் வருடைமானின் குட்டி
தன் தாயின் மடியிலிருந்து பொழியும் இனிய பாலை வயிறாரக் குடித்து

வெண் பூ வேளையொடு பைம் சுரை கலித்து – பதி 15/9

வெண்மையான பூக்களைக்கொண்ட வேளைக்கொடியுடன், பசுமையான சுரைக்கொடிகள் தழைத்துப் படர,

சுரை அம்பு மூழ்க சுருங்கி – கலி 6/3

காம்பு செருகும் துளையை உடைய அம்பு தைத்தலினால் உடல் தளர்ந்து

அல்கு வன் சுரை பெய்த வல்சியர் – அகம் 113/11

மிக்க வலிய மூங்கில் குழாயில் பெய்த உணவினையுடையவர்

மடை அமை திண் சுரை மா காழ் வேலொடு – அகம் 119/13

மூட்டுவாய் அமைந்த திண்ணிய பூணினையும் கரிய தண்டினையுமுடைய வேலுடன்

உரல் முகம் காட்டிய சுரை நிறை கொள்ளை – அகம் 393/12

உரலில் பெய்து தீட்டிய உரலின் குழி நிறைந்த அரிசியை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *