சொல் பொருள்

(பெ) 1. மேகம் நீர் நிரம்பியிருத்தல், 2. கருப்பம், 3. முட்டை,

சொல் பொருள் விளக்கம்

1. மேகம் நீர் நிரம்பியிருத்தல்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Wateriness of clouds, pregnancy, egg

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கார்கோள் முகந்த கமம் சூல் மா மழை – திரு 7

கடலில் முகந்த நிறைத்த நீர் கொண்ட மேகங்கள்,

எய்யா இளம் சூல் செய்யோள் அம் வயிற்று
ஐது மயிர் ஒழுகிய தோற்றம் போல – பொரு 6,7

(பிறரால் நன்கு)அறியப்படாத இளைய கருவினையுடைய சிவந்த நிறமுடையவளின் அழகிய வயிற்றின்மேல் மென்மையாகிய மயிர் ஒழுங்குபடக் கிடந்த தோற்றத்தைப்போல,

ஞமலி தந்த மனவு சூல் உடும்பின் – பெரும் 132

நாய்(கடித்துக்) கொணர்ந்த சங்குமணி(போன்ற) முட்டைகளையுடைய உடும்பின்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.