சொல் பொருள்
(பெ) 1. யானையின் முகபடாம், 2. உச்சி, 3. நீர்நிலை, சுனை,
சொல் பொருள் விளக்கம்
1. யானையின் முகபடாம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Ornamental covering for the elephant’s face, top portion, ponds in hill
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சூழி யானை சுடர் பூண் நன்னன் – அகம் 15/10 முகபடாம் அணிந்த யானையினைக் கொண்ட – ஒளிர்கின்ற அணிகலன்களைப் பூண்ட – நன்னனின் கூழையும் குறு நெறி கொண்டன முலையும் சூழி மென் முகம் செப்புடன் எதிரின – அகம் 315/1,2 தலைமயிரும் குறுகிய நெறிப்பினைக் கொண்டன, முலையும் உச்சியிலுள்ள மெல்லிய முகத்தால் சிமிழுடன் மாறுபட்டன அலங்கு கதிர் சுமந்த கலங்கல் சூழி நிலை தளர்வு தொலைந்த ஒல்கு நிலை பல் கால் பொதியில் – புறம் 375/1-3 அசைகின்ற கதிர்கள் நிரம்பிக் கலங்கிக் கிடக்கும் நீர்நிலை போல நிலைதளர்ந்து பாழ்பட்டு வெடித்துச் சீரழிந்த தரையையும் பல கால்களையும் உடைய மன்றத்தின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்