சொல் பொருள்
(வி) 1. சுற்றி மொய், 2. சுற்றியிரு, 3. சுற்றிவா, 4. ஆராய், 5. உருவாக்கு, 6. கருது,
2. (பெ) சுற்றுதல்,
சொல் பொருள் விளக்கம்
1. சுற்றி மொய்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
hover around, swarm, encompass, surround, go around, deliberate, examine, make, construct, design, intend, surroundings
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சுறவு வாய் அமைத்த சுரும்பு சூழ் சுடர் நுதல் – பெரும் 385 மகரவாயாகிய தலைக்கோலத்தைச் சேர்த்தின, சுரும்புகள் சுற்றி மொய்க்கும் ஒளியையுடைய நுதலினையும், வாழ் முள் வேலி சூழ் மிளை படப்பை – பெரும் 126 உயிருள்ள முள்செடியாலான வேலியையும், சுற்றியிருக்கும் காவற்காட்டினையும் உடைய ஊர்ப்புறத்தையும் பணை தோள் குறு_மகள் பாவை தைஇயும் பஞ்சாய் பள்ளம் சூழ்ந்தும் – குறு 276/1,2 மூங்கிலைப் போன்ற தோள்களையுடைய இளையவளுக்காகப் பாவையைப் பண்ணியதையும் அதற்குப் பஞ்சாய்க் கோரை இருக்கும் பள்ளத்தைச் சுற்றிவந்ததையும், அரும் கடி நீவாமை கூறின் நன்று என நின்னொடு சூழ்வல் தோழி – கலி 54/17,18 அரிய கட்டுக்காவலை நான் மீறிக்கொண்டு செல்லாமல் இவனோடே மணம் கொள்ளுமாறு நீ செய்தால் நல்லது என்று உன்னோடு கலந்துபேசி ஆராய விரும்புகிறேன் அலவன் ஆட்டியும் உரவு திரை உழக்கியும் பாவை சூழ்ந்தும் பல் பொறி மருண்டும் – பட் 101,102 நண்டுகளை அலைக்கழித்தும், தொடர்ந்து வரும் அலைகளை மிதித்து விளையாடியும், (ஈர மணலில்)உருவங்களை உருவாக்கியும்; ஐம்பொறிகளால் நுகரும்பொருள்களை நுகர்ந்து மயங்கியும், தட மென் பணை தோள் மட நல்லோள்_வயின் பிரிய சூழ்ந்தனை ஆயின் அரியது ஒன்று எய்தினை வாழிய நெஞ்சே – நற் 137/2-4 நீண்ட மென்மையான பருத்த தோள்களை உடைய இளமையான நம் தலைவியை விட்டுப் பிரிந்துபோக எண்ணினால், அவளைக் காட்டிலும் அரியது ஒன்றனை எய்தினவனாவாய், வாழ்க நெஞ்சமே ஊசி போகிய சூழ் செய் மாலையன் – அகம் 48/9 ஊசியால் கோத்துச் சுற்றுதல் அமைந்த மாலையை உடையவன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்