சொல் பொருள்
(பெ) 1. தோளின் மேல்பகுதி, 2. சிவப்பு
சொல் பொருள் விளக்கம்
1. தோளின் மேல்பகுதி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
upper part of the shoulders
redness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பிறந்து தவழ் கற்றதன் தொட்டு சிறந்த நல் நாடு செகில் கொண்டு நாள்-தொறும் வளர்ப்ப – பொரு 137,138 பிறந்து தவழ்தலைக் கற்ற நாள் தொடங்கி, சிறந்த நல்ல நாட்டை(த் தன்) தோளில் வைத்துக்கொண்டு, (அதனை)நாள்தோறும் வளர்த்தலால், கொள்வார் பெறாஅ குரூஉ செகில் காணிகா – கலி 105/36 பிடிப்பதற்கு ஆள் இல்லாமல் இருக்கிற அந்தச் செந்நிறக் காளையைப் பார்!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்