சொல் பொருள்
செத்தை – உலர்ந்து போன இலை, சருகு முதலியவை.
செதும்பல் – உலர்ந்து போன இலை சருகு முதலியவை செதுமி அல்லது செம்மிக் கிடத்தல்.
சொல் பொருள் விளக்கம்
செத்தை உலர்ந்து போன ஒன்றைக் குறிக்கும். செதும்பல் எனின் செத்தைகள் பல செறிந்து கிடத்தலைக் குறிக்கும். மடை, நீர்ப்பிடியடைத்துக் கிடந்தால் ‘செத்தை செதும்பல்’ அடைத்துக் கொண்டு இருக்கும்; எடுத்தால் சரட்டென நீர் போகும்” என்பது வழக்கம். செறிந்து கிடத்தல் ‘ செம்மல்’ எனப்படுவதை அறியின் செதும்பல் விளக்கமாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்