சொல் பொருள்
(பெ) 1. தலை, 2. உச்சி, 3. பாணர்
சொல் பொருள் விளக்கம்
1. தலை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
head, top, bard
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முடியொடு விளங்கிய முரண் மிகு திரு மணி மின் உறழ் இமைப்பின் சென்னி பொற்ப – திரு 84,85 முடியோடு விளங்கிய (ஒன்றற்கொன்று)மாறுபாடு மிகும் அழகினையுடைய மணிகள் மின்னலுக்கு மாற்றாகும் சிமிட்டலுடன் தலையில் பொலிவுபெறவும், ஏணி சாத்திய ஏற்ற அரும் சென்னி விண் பொர நிவந்த வேயா மாடத்து – பெரும் 347,348 ஏணியைச் சாத்திய ஏறுதற்கரிய உச்சியினையுடைய, விண்ணைத் தீண்டும்படி உயர்ந்த வேயாது (சாந்திட்ட)மாடத்தில் செ வரை நாடன் சென்னியம் எனினே – பெரும் 103 செவ்விய மலைநாட்டை உடையவனுடைய பாணர் யாம்’ எனின்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்