Skip to content

சொல் பொருள்

(பெ) 1. அருந்ததி, 2. செவ்வாய் கோள்மீன்

சொல் பொருள் விளக்கம்

1. அருந்ததி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

The star Arundhati, The planet Mars

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

செம்மீன் அனையள் நின் தொல் நகர் செல்வி – பதி 31/28

செம்மீனாகிய அருந்ததியைப் போன்றவள் உன் தொன்மையான அரண்மனையின் செல்வியான உன் மனைவி

செம்மீன் இமைக்கும் மாக விசும்பின் – புறம் 60/2

செவ்வாய் மீன் விளங்கும் மாகமாகிய விசும்பின்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.