சொல் பொருள்
(பெ) பகைவர்,
சொல் பொருள் விளக்கம்
பகைவர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
enemies
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பல் இரும் கூந்தல் பசப்பு நீ விடின் செல்வேம் தில்ல யாமே செற்றார் வெல் கொடி அரணம் முருக்கிய கல்லா யானை வேந்து பகை வெலற்கே – ஐங் 429/1-4 பலவான கரிய கூந்தலையுடையவளே! பிரிவால் பசந்துபோவதை நீ நிறுத்திக்கொண்டால் மட்டுமே செல்கிறேன் நான்; பகைவரின் வெற்றிகுறித்து எழுப்பிய கொடிகளையுடைய கோட்டையை அழிக்கும், போரையன்றி வேறொன்றைக் கல்லாத யானைப்படையையுள்ள நம் வேந்தனின் பகைவரை வெல்வதற்கு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்