சொல் பொருள்
பெ) 1.காலம், 2. ஏற்ற காலம், 3 பக்குவம், 4.அழகு, எழில், 5. நேர்முகம், காட்சி, 6. நுகர்தல், துய்த்தல், சுவைத்தல்
சொல் பொருள் விளக்கம்
1.காலம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
time, opportune moment, matured condition, beauty, gracefulness, audience, interview, enjoyment, tasting
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விடர் கால் அருவி வியன் மலை மூழ்கி சுடர் கால் மாறிய செவ்வி நோக்கி – சிறு 170,171 முழைஞ்சுகளில் குதிக்கும் அருவியினையுடைய பெரிய மலையில் மறைந்து, 170 ஞாயிற்றின் (ஒளிச்)சுடர்கள் மாறிப்போன அந்திக்காலத்தைப் பார்த்து பொன் கொழித்து இழிதரும் போக்கு அரும் கங்கை பெரு நீர் போகும் இரியல் மாக்கள் ஒரு மர பாணியில் தூங்கி ஆங்கு தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇ செவ்வி பார்க்கும் செழு நகர் முற்றத்து – பெரும் 431-435 பொன்னைக் கொழித்துக்கொண்டு குதிக்கும் கடத்தற்கரிய கங்கையாற்றின் பெரிய நீரைக் கடந்துபோகும் மனக்கலக்கமுள்ள மாக்கள் ஒரேயொரு தோணி வரும் காலத்திற்காகக் காத்திருத்தலைப் போல – கெடாத திரைப்பொருளோடு நெருங்கித் திரண்டு, (பொருந்திய)நேரம் பார்க்கும் வளவிய முற்றத்தினையுடைய; மடவரல் மகளிர் பிடகை பெய்த செவ்வி அரும்பின் பைம் கால் பித்திகத்து – நெடு 39,40 பேதைமை (மிக்க)பெண்கள் — (தம் கையிலுள்ள) பூத்தட்டுகளில் பறித்துப்போட்ட (மலரும்)பக்குவத்திலுள்ள மொட்டுக்களின் பசிய காலினையுடைய பிச்சியின் செவ்வி சேர்ந்த புள்ளி வெள் அரை – நற் 26/2 அழகு அமைந்த புள்ளிகளைக் கொண்ட வெள்ளிய அடிப்பாகத்தையுடைய அரிதால் பெரும நின் செவ்வி என்றும் – புறம் 169/6 உன்னைக் காணும் காலம் பெறல் அரிது எந்நாளும் பொய்யா மரபின் பூ மலி பெரும் துறை செவ்வி கொள்பவரோடு அசைஇ அ வயின் – பெரும் 389,390 பொய்க்காத மரபினையுடைய பூக்கள் மிகுகின்ற பெரிய துறையிடத்தே, (இளவேனில்)இன்பத்தை நுகர்வாரோடு இளைப்பாறி; அவ்விடத்தில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்