சேகரம் என்பதன் பொருள் நட்பு.
1. சொல் பொருள்
நட்பு, சேகரிப்பு; சம்பாத்தியம்; தயாரிப்பு; கூட்டம்; வமிசம்; சரகம். பிரதேசம்.
தலை, சிரத்திலணிவது, மணிமுடி, அழகு
மாமரம், முருங்கை
மொழிபெயர்ப்புகள்
2. ஆங்கிலம்
- acquisition, that which is secured, savings
- provision, preparation, readiness
- collection, assemblage, gathering
- family, tribe
- district, station
- crown, crest
- head
- that which is worn on the head ,as garland of flowers
- beauty
- mango tree, genus Moringa
3. சொல் பொருள் விளக்கம்
சேர்ந்திருத்தல் என்னும் பொருளது “இவனுக்கும் அவனுக்கும் சேகரம் “என்பர் இதனால் நட்புப் பொருள் இதற்குண்மை விளங்கும். சேர்ந்த வீடுகள், சேர்ந்த நிலங்கள் ஆகியவை ஒரே சேகரமாக உள்ளன எனப்படும். சேர்ந்திருத்தல் என்னும் பொருளுடைய ‘சேரகம்’ என்னும் சொல்லின் எழுத்துகளாகிய ரகரகரகங்கள் இடமாறிச் சேகரம் ஆயின. எனினும் பொருள் மாற்றமின்றி வழங்குகின்றது. சிவிறி என்பது விசிறியாகவும், கொப்புளம் என்பது பொக்களமாகவும் வழங்குவதுபோல என்க.
4. பயன்பாடு
புத்தகசேகரம்.
நீ எந்தச் சேகரத்தான்
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்