சொல் பொருள்

(பெ) பாதுகாவல்,

சொல் பொருள் விளக்கம்

பாதுகாவல்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

protection, security

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

சேம திரை வீழ்த்து சென்று அமளி சேர்குவோர்
தாம் வேண்டு காதல் கணவர் எதிர்ப்பட
பூ மேம்பாடு உற்ற புனை சுரும்பின் சேம
மட நடை பாட்டியர் தப்பி தடை இறந்து – பரி 10/34-37

பாதுகாவலான திரையைச் சூழப்போட்டு தன் கணவருடன் மலர்ப்படுக்கையில் கூடிக்களிப்போருமாய்,
தாம் விரும்புகின்ற காதல் கணவர்கள் எதிர்ப்பட்டபோது,
பூவின் சிறப்பினால் அதன்மீது மொய்க்கவரும் அழகிய வண்டினைப் போல, தமக்குக் காவலாகிய
தளர்நடைப் பாட்டியரிடமிருந்து தப்பித்து, தடைகளை மீறிக் காதலரை எதிர்கொள்ள

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.