Skip to content

1. சொல் பொருள்

(பெ) பல பறவைகளின் ஆண், 

2. சொல் பொருள் விளக்கம்

பல பறவைகளின் ஆண்,

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

the male of many birds

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வண்டு – கொங்கு கவர் நீல செம் கண் சேவல் – சிறு 184

புறா – இறை உறை புறவின் செம் கால் சேவல் – பெரும் 439

கம்புள் – கம்புள் சேவல் இன் துயில் இரிய – மது 254

அன்னம் – செம் கால் அன்னத்து சேவல் அன்ன – மது 386

காட்டுக்கோழி – கான கோழி கவர் குரல் சேவல் – மலை 510

குருவி – உள் இறை குரீஇ கார் அணல் சேவல் – நற் 181/1

கடல்காக்கை – கடல் அம் காக்கை செ வாய் சேவல் – நற் 272/1

பருந்து – எருவை சேவல் கிளை_வயின் பெயரும் – நற் 298/4

கூகை – கூகை சேவல் குராலோடு ஏறி – நற் 319/4

காடை – பொறி புற பூழின் போர் வல் சேவல் – புறம் 321/1

கழுகு – அழல் போல் செவிய சேவல் ஆட்டி – நற் 352/4

வீட்டுக்கோழி – தொகு செம் நெற்றி கணம்_கொள் சேவல் – குறு 107/2

நீர்க்கோழி – நீர் உறை கோழி நீல சேவல் – ஐங் 51/1

யானையங்குருகு – யானையங்குருகின் சேவலொடு காமர் – மது 674

குயில் – சேவலொடு கெழீஇய செம் கண் இரும் குயில் – நற் 118/3

அன்றில் – சேவலொடு புணரா சிறு கரும் பேடை – அகம் 270/13

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *