சொல் பொருள்
சொண்டு – காய்கறி பழங்களின் வெளியேயுள்ள சுணை, பக்கு, வெடிப்பு முதலியவை சொண்டு எனப்படும்.
சொள்ளை – அவற்றின் உள்ளேயமைந்துள்ள கேடு சொள்ளை எனப்படும்.
சொல் பொருள் விளக்கம்
சுணை மிக்க ஒன்று ‘பூசுணை’ என்பதை அறிக. அதன் காம்பு இலைகளில் முன்போல் அமைந்த அமைப்பையும் வெண்ணிறச் சுணையையும் கருதுக. சுணை படுதலால் அரிப்பு உண்டாகும். அரிப்பு உண்டாகாமை சுணை கெட்டதாம். மான மற்றவனைச் சூடு சொரணை இல்லாதவன் என்பதால் அறிக. சொரணையும் சுணையும் ஒப்பாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்