சொரி என்பதன் பொருள்சிதறிவிடு, கொட்டு, மிகுதியாகக் கொடு, வழங்கு, தொகுதியாகச் செலுத்து, சொட்டு, சொரி, (பெ) தினவு
1. சொல் பொருள் விளக்கம்
1 (வி) 1. சிதறிவிடு, 2. கொட்டு, 3. மிகுதியாகக் கொடு, வழங்கு, 4. தொகுதியாகச் செலுத்து, 5. சொட்டு, 6. சொரி, 2 (பெ) தினவு
மொழிபெயர்ப்புகள்
2. ஆங்கிலம்
shoot down, pour down, give away in plenty, shoot as arrows, drop out, itching, tingling.
3. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
கம்மியர் செம்பு சொரி பானையின் மின்னி – நற் 153/2,3 கொல்லர் கடையும்போது செம்புப்பொறிகளைச் சிதறிவிடும் பானையைப் போல மின்னலிட்டு, பல் பூ கானல் முள் இலை தாழை சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ – நற் 335/4,5 பலவான பூக்களையுடைய கடற்கரைச் சோலையின் முள் உள்ள இலைகளைக்கொண்ட தாழை சோற்றை அள்ளிக்கொட்டும் அகப்பையைப் போல கூம்பிய மொட்டு அவிழ, இலம்படு புலவர் ஏற்ற கை ஞெமர பொலம் சொரி வழுதியின் புனல் இறை பரப்பி – பரி 10/126,127 இல்லாத புலவர்கள் ஏந்திநின்ற கைகள் நிரம்பும்படி தங்கத்தை மிகுதியாக வழங்குகின்ற பாண்டிய மன்னனைப் போலவே, வையைஆறு நீரை நாடெங்கும் இறைத்துப் பரப்பி வில்லு சொரி பகழியின் மென் மலர் தாயின வல்லு போர் வல்லாய் மலை மேல் மரம் – பரி 18/40,41 வில்லிலிருந்து செலுத்தப்படும் அம்புகளைப் போல் மெல்லிய மலர்களைச் சொரிந்து பரப்பின சூதாட்டத்தில் வல்லவனே! உன் மலை மேலிருக்கும் மரங்கள் கண்ணீர் சொரி முத்தம் காழ் சோர்வ போன்றன – கலி 82/13,14 அவளின் கண்ணீர் சொட்டுச்சொட்டாய் வடிந்தது முத்து மாலை அறுந்து முத்துக்கள் சிந்தியது போல் இருந்தது சொரி புறம் உரிஞிய நெறி அயல் மரா அத்து – அகம் 121/8 தினவு பொருந்திய தன் முதுகினை உராய்ந்துகொண்டதான, வழியின் பக்கத்தே உள்ள வேண்கடம்பின் கை ஏந்து ஐ அகல் நிறைய நெய் சொரிந்து பரூஉ திரி கொளீஇய குரூஉ தலை நிமிர் எரி - நெடு 102,103 செம்பு சொரி பானையின் மின்னி எ வாயும் - நற் 153/3 சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ - நற் 335/5 சொரி சுரை கவரும் நெய் வழிபு உராலின் - பதி 47/5 பொலம் சொரி வழுதியின் புனல் இறை பரப்பி - பரி 10/127 வில்லு சொரி பகழியின் மென் மலர் தாயின - பரி 18/40 சொரி முத்தம் காழ் சோர்வ போன்றன மற்றும் - கலி 82/14 ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறி - அகம் 39/6 சொரி புறம் உரிஞிய நெறி அயல் மரா அத்து - அகம் 121/8 சொரி புறம் உரிஞ்ச புரி ஞெகிழ்பு உற்ற - சிலப்.புகார் 10/122 பரூஉ காழ் ஆரம் சொரிந்த முத்தமொடு - மது 681 வேய் கொள் அரிசி மிதவை சொரிந்த சுவல் விளை நெல்லின் அவரை அம் புளிங்கூழ் - மலை 435,436 கைவல் வினைவன் தையுபு சொரிந்த சுரிதக உருவின ஆகி பெரிய - நற் 86/5,6 வான் இகுபு சொரிந்த வயங்கு பெயல் கடை நாள் - நற் 142/1 பாணர் பசு மீன் சொரிந்த மண்டை போல - குறு 169/4 நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும் - குறு 233/5 முள் எயிற்று பாண்மகள் இன் கெடிறு சொரிந்த அகன் பெரு வட்டி நிறைய மனையோள் - ஐங் 47/1,2 வராஅல் சொரிந்த வட்டியுள் மனையோள் - ஐங் 48/2 அருவி சொரிந்த திரையின் துரந்து - பரி 20/103 சில் வளை சொரிந்த மெல் இறை முன்கை - அகம் 19/15 நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி - அகம் 86/15 நிதியம் சொரிந்த நீவி போல - அகம் 313/11 மான் தசை சொரிந்த வட்டியும் ஆய்_மகள் - புறம் 33/2 நெய் உலை சொரிந்த மை ஊன் ஓசை - புறம் 261/8 துறு மலர் பிணையல் சொரிந்த பூம் துகள் - சிலப்.மது 22/123 கருவி வானம் துளி சொரிந்து ஆங்கு - பெரும் 24 கை ஏந்து ஐ அகல் நிறைய நெய் சொரிந்து பரூஉ திரி கொளீஇய குரூஉ தலை நிமிர் எரி - நெடு 102,103 சில் மீன் சொரிந்து பல் நெல் பெறூஉம் - ஐங் 49/2 ஆர் கலி வானம் தளி சொரிந்து ஆங்கு - பதி 43/18 கருவி வானம் தண் தளி சொரிந்து என - பதி 76/10 பவள செப்பில் பொன் சொரிந்து அன்ன - அகம் 25/11 அயிலை துழந்த அம் புளி சொரிந்து கொழு மீன் தடியொடு குறு_மகள் கொடுக்கும் - அகம் 60/5,6 நேர் கால் முது கொடி குழைப்ப நீர் சொரிந்து காலை வானத்து கடும் குரல் கொண்மூ - அகம் 174/6,7 அவிர் கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து தழை அணி பொலிந்த கோடு ஏந்து அல்குல் - அகம் 201/5,6 அதிர் குரல் ஏறோடு துளி சொரிந்து ஆங்கு - புறம் 160/3 வம்ப பெரும் பெயல் வரைந்து சொரிந்து இறந்து என - புறம் 325/2 பூவும் பொன்னும் புனல் பட சொரிந்து பாசிழை மகளிர் பொலம் கலத்து ஏந்திய - புறம் 367/5,6 மாரி அன்ன வண்மையின் சொரிந்து வேனில் அன்ன என் வெப்பு நீங்க - புறம் 397/16,17 பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து துணங்கையர் குரவையர் அணங்கு எழுந்து ஆடி - சிலப்.புகார் 5/69,70 பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்ப - அகம் 108/5
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்