Skip to content

சொல் பொருள்

(பெ.அ) பழமையான, நெடுங்காலமாக இருந்து வருகின்ற, நாட்பட்ட,

சொல் பொருள் விளக்கம்

பழமையான, நெடுங்காலமாக இருந்து வருகின்ற, நாட்பட்ட,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

ancient, belonging to times long past

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

உயிர் கலந்து ஒன்றிய தொன்றுபடு நட்பின் – அகம் 205/1

உயிருடன் கலந்துபொருந்திய பல பிறவிகளிலும் தொடர்ந்து வருகின்ற நட்பினால்

தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்று-கொல் – அகம் 101/3

தொன்றுதொட்டு வழங்கும் பழமொழி இன்று பொய்யாகியதோ?

தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கி – புறம் 393/16

பழமையுற்றுக் கிழிந்து பிளவுபட்ட என் பீறிய உடையை முற்றவும் நீக்கி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *