Skip to content
சொரி

சொரி என்பதன் பொருள்சிதறிவிடு, கொட்டு, மிகுதியாகக் கொடு, வழங்கு, தொகுதியாகச் செலுத்து, சொட்டு, சொரி, (பெ) தினவு

1. சொல் பொருள் விளக்கம்

1 (வி) 1. சிதறிவிடு, 2. கொட்டு, 3. மிகுதியாகக் கொடு, வழங்கு,  4. தொகுதியாகச் செலுத்து, 5. சொட்டு, 6. சொரி, 2 (பெ) தினவு

மொழிபெயர்ப்புகள்

2. ஆங்கிலம்

shoot down, pour down, give away in plenty, shoot as arrows, drop out, itching, tingling.

சொரி
சொரி Photo by Louis from Pexels

3. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

கம்மியர்
செம்பு சொரி பானையின் மின்னி – நற் 153/2,3

கொல்லர் கடையும்போது
செம்புப்பொறிகளைச் சிதறிவிடும் பானையைப் போல மின்னலிட்டு,

பல் பூ கானல் முள் இலை தாழை
சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ – நற் 335/4,5

பலவான பூக்களையுடைய கடற்கரைச் சோலையின் முள் உள்ள இலைகளைக்கொண்ட தாழை
சோற்றை அள்ளிக்கொட்டும் அகப்பையைப் போல கூம்பிய மொட்டு அவிழ,

இலம்படு புலவர் ஏற்ற கை ஞெமர
பொலம் சொரி வழுதியின் புனல் இறை பரப்பி – பரி 10/126,127

இல்லாத புலவர்கள் ஏந்திநின்ற கைகள் நிரம்பும்படி
தங்கத்தை மிகுதியாக வழங்குகின்ற பாண்டிய மன்னனைப் போலவே, வையைஆறு நீரை நாடெங்கும் இறைத்துப் பரப்பி

வில்லு சொரி பகழியின் மென் மலர் தாயின
வல்லு போர் வல்லாய் மலை மேல் மரம் – பரி 18/40,41

வில்லிலிருந்து செலுத்தப்படும் அம்புகளைப் போல் மெல்லிய மலர்களைச் சொரிந்து பரப்பின
சூதாட்டத்தில் வல்லவனே! உன் மலை மேலிருக்கும் மரங்கள்

கண்ணீர்
சொரி முத்தம் காழ் சோர்வ போன்றன – கலி 82/13,14

அவளின் கண்ணீர்
சொட்டுச்சொட்டாய் வடிந்தது முத்து மாலை அறுந்து முத்துக்கள் சிந்தியது போல் இருந்தது

சொரி புறம் உரிஞிய நெறி அயல் மரா அத்து – அகம் 121/8

தினவு பொருந்திய தன் முதுகினை உராய்ந்துகொண்டதான, வழியின் பக்கத்தே உள்ள வேண்கடம்பின்

கை ஏந்து ஐ அகல் நிறைய நெய் சொரிந்து
பரூஉ திரி கொளீஇய குரூஉ தலை நிமிர் எரி - நெடு 102,103

செம்பு சொரி பானையின் மின்னி எ வாயும் - நற் 153/3

சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ - நற் 335/5

சொரி சுரை கவரும் நெய் வழிபு உராலின் - பதி 47/5

பொலம் சொரி வழுதியின் புனல் இறை பரப்பி - பரி 10/127

வில்லு சொரி பகழியின் மென் மலர் தாயின - பரி 18/40

சொரி முத்தம் காழ் சோர்வ போன்றன மற்றும் - கலி 82/14

ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறி - அகம் 39/6

சொரி புறம் உரிஞிய நெறி அயல் மரா அத்து - அகம் 121/8

சொரி புறம் உரிஞ்ச புரி ஞெகிழ்பு உற்ற - சிலப்.புகார் 10/122

பரூஉ காழ் ஆரம் சொரிந்த முத்தமொடு - மது 681

வேய் கொள் அரிசி மிதவை சொரிந்த
சுவல் விளை நெல்லின் அவரை அம் புளிங்கூழ் - மலை 435,436

கைவல் வினைவன் தையுபு சொரிந்த
சுரிதக உருவின ஆகி பெரிய - நற் 86/5,6

வான் இகுபு சொரிந்த வயங்கு பெயல் கடை நாள் - நற் 142/1

பாணர் பசு மீன் சொரிந்த மண்டை போல - குறு 169/4

நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும் - குறு 233/5

முள் எயிற்று பாண்மகள் இன் கெடிறு சொரிந்த
அகன் பெரு வட்டி நிறைய மனையோள் - ஐங் 47/1,2

வராஅல் சொரிந்த வட்டியுள் மனையோள் - ஐங் 48/2

அருவி சொரிந்த திரையின் துரந்து - பரி 20/103

சில் வளை சொரிந்த மெல் இறை முன்கை - அகம் 19/15

நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி - அகம் 86/15

நிதியம் சொரிந்த நீவி போல - அகம் 313/11

மான் தசை சொரிந்த வட்டியும் ஆய்_மகள் - புறம் 33/2

நெய் உலை சொரிந்த மை ஊன் ஓசை - புறம் 261/8

துறு மலர் பிணையல் சொரிந்த பூம் துகள் - சிலப்.மது 22/123

கருவி வானம் துளி சொரிந்து ஆங்கு - பெரும் 24

கை ஏந்து ஐ அகல் நிறைய நெய் சொரிந்து
பரூஉ திரி கொளீஇய குரூஉ தலை நிமிர் எரி - நெடு 102,103

சில் மீன் சொரிந்து பல் நெல் பெறூஉம் - ஐங் 49/2

ஆர் கலி வானம் தளி சொரிந்து ஆங்கு - பதி 43/18

கருவி வானம் தண் தளி சொரிந்து என - பதி 76/10

பவள செப்பில் பொன் சொரிந்து அன்ன - அகம் 25/11

அயிலை துழந்த அம் புளி சொரிந்து
கொழு மீன் தடியொடு குறு_மகள் கொடுக்கும் - அகம் 60/5,6

நேர் கால் முது கொடி குழைப்ப நீர் சொரிந்து
காலை வானத்து கடும் குரல் கொண்மூ - அகம் 174/6,7

அவிர் கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து
தழை அணி பொலிந்த கோடு ஏந்து அல்குல் - அகம் 201/5,6

அதிர் குரல் ஏறோடு துளி சொரிந்து ஆங்கு - புறம் 160/3

வம்ப பெரும் பெயல் வரைந்து சொரிந்து இறந்து என - புறம் 325/2

பூவும் பொன்னும் புனல் பட சொரிந்து
பாசிழை மகளிர் பொலம் கலத்து ஏந்திய - புறம் 367/5,6

மாரி அன்ன வண்மையின் சொரிந்து
வேனில் அன்ன என் வெப்பு நீங்க - புறம் 397/16,17

பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து
துணங்கையர் குரவையர் அணங்கு எழுந்து ஆடி - சிலப்.புகார் 5/69,70

பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்ப - அகம் 108/5

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *