Skip to content

உ வரிசைச் சொற்கள்

உ வரிசைச் சொற்கள், உ வரிசைத் தமிழ்ச் சொற்கள், உ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், உ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

உவமம்

சொல் பொருள் விளக்கம் உவமம் என்பது ஒரு பொருளோடு ஒரு பொருளினை ஒப்புமை கூறுதல். (தொல். பொருள். 276. பேரா.)

உலகு

சொல் பொருள் விளக்கம் உல என்பது வேர்ச் சொல். அதற்கு உருண்டை என்பது பொருள். இவ்வேர்ச் சொல்லினின்றும் பிறக்கும் தமிழ்ச் சொற்கள் உலக்கை, உலம், உலண்டு முதலியனவாகும். ஆதியிற் கற்பாறைக்குக் குழியாகிய உரல்களில் உருண்டைக்… Read More »உலகு

உலகம்

சொல் பொருள் வட்டமாய் இருப்பது அல்லது சுழல்வது அல்லது கதிரவனைச் சுற்றி வருவது நிலத்தையும் உயிர்களையும் ஒழுக்கத்தையும் உணர்த்தி நிற்கும் சொல் பொருள் விளக்கம் 1) உலகம் என்பது பலபொருள் ஒரு சொல்லாய் நிலத்தையும்… Read More »உலகம்

உரையசை

சொல் பொருள் விளக்கம் உரையசையாவது பொருட்பேறு குறியாது கட்டுரைச் சுவைபட வருவது. என்னே, அசைத்தலே பொருளாக வருவதாம். (திருக்குறள். தண்ட. 235.)

உருள் இழை

சொல் பொருள் ஒருவகைத் தலைக்கோலம் தொய்யகம் பூரப்பாளை சொல் பொருள் விளக்கம் உருள் இழை என்றது தலையில் கிடந்துருளும் தலைப்பாளை என்னும் ஒருவகைத் தலைக்கோலம், என்பது (நச்.) உரையாற் பெற்றாம். இதனைத் ‘தொய்யகம்’ என்பர்… Read More »உருள் இழை

உருவகம்

சொல் பொருள் விளக்கம் உவமையும் பொருளும் ஒன்றுபட ஒன்றுள் ஒன்று மறைய உருவாக்கிய உவமை உருவகம் எனப்படும். (முதற்குறள். உவமை. 135.)

உருபும் சாரியையும்

சொல் பொருள் விளக்கம் ஆன் உருபிற்கும் ஆன் சாரியைக்கும் இன் உருபிற்கும் இன் சாரியைக்கும் வேற்றுமை யாது எனின், அவை சாரியை யான இடத்து யாதானும் ஓர் உருபேற்று முடியும். உருபாயின இடத்து வேறோர்… Read More »உருபும் சாரியையும்

உரிச்சொல்

சொல் பொருள் ஒரு மூலம் பலவகைச் சொற்களும் தோன்றுவதற்கு இடம் தந்து நிற்பது தமிழுக்குரிய சிறப்புக்களில் ஒன்றாகும். இவ்வாறு சொற்கள் தோன்றுவதற்கு உரியனவாக இருத்தலினால்தான் ஆசிரியர் தொல்காப்பியர் வேர்ச்சொற்களை உரிச்சொல் என்று அழைத்தார் சொல்… Read More »உரிச்சொல்