Skip to content

கை வரிசைச் சொற்கள்

கை வரிசைச் சொற்கள், கை வரிசைத் தமிழ்ச் சொற்கள், கை என்ற எழுத்தில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், கை என்ற உயிர்மெய் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

கைப்பிடி

சொல் பொருள் மாடி மேல் கட்டும் காப்புச் சுவரைக் கைப்பிடிச் சுவர் என்பது பொது வழக்கு கைப்பிடி என்பது திருமணம் என்னும் பொருளில் செட்டி நாட்டு வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் மாடி… Read More »கைப்பிடி

கைப்பாணி

சொல் பொருள் கைப்பணி செய்வதற்கு உதவும் பூச்சுப் பலகையைக் கைப்பாணி என்பது கொற்றர் வழக்காகும் சொல் பொருள் விளக்கம் கைப்பணி செய்வதற்கு உதவும் பூச்சுப் பலகையைக் கைப்பாணி என்பது கொற்றர் வழக்காகும். மட்டப் பலகை… Read More »கைப்பாணி

கைத்துப்போதல்

சொல் பொருள் கைத்தல் பதன் கெட்டுப் போதல் என்னும் பொருளில் கோவை முகவை மதுரை எனப் பல மாவட்ட வழக்குகளில் உண்டு சொல் பொருள் விளக்கம் ஈயம் இல்லாக் கலத்தில் வைக்கப்பட்ட புளிப்புப் பொருள்… Read More »கைத்துப்போதல்

கையோங்குதல்

சொல் பொருள் கையோங்குதல் – வெற்றி, செல்வம் ஆகியவை மிகுதல் சொல் பொருள் விளக்கம் கை என்பது பக்கம் என்னும் பொருளும் தருவது. இருபக்கத்தார் விளையாட்டு, போர், பொருளீட்டல் முதலியவற்றில் ஈடுபடுங்கால் அந்தக் கையிலும்… Read More »கையோங்குதல்

கையாள்

சொல் பொருள் கையாள் – குறிப்பறிந்து செய்பவன். சொல் பொருள் விளக்கம் கைகாரனாக இருப்பவன் தனக்குக் கையாள் வைத்திருப்பது வழக்கம். கைகாரன் என்ன நினைக்கிறானோ அந்நினைப்பைக் குறிப்பாலேயே அறிந்து செயலாற்றுவதில் தேர்ந்தவன் கையாள் ஆவான்.… Read More »கையாள்

கையாலாகாதவன் – செயலற்றவன்

சொல் பொருள் கையாலாகாதவன் – செயலற்றவன் சொல் பொருள் விளக்கம் கையிருக்கும். எடுப்பான் ; கொடுப்பான் ; கைவேலை செய்வான். எனினும் கையாலாகாதவன் எனப் பெயரும் பெறுவான். எப்படி? வீட்டுக்கோ அலுவலகத்திற்கோ தொழிற்சாலைக்கோ பொறுப்பாளனாக… Read More »கையாலாகாதவன் – செயலற்றவன்

கையடித்தல்

சொல் பொருள் கையடித்தல் – உறுதி செய்தல் சொல் பொருள் விளக்கம் ஒன்றை ஒப்புக் கொண்டு உறுதி சொல்பவரும், ஒன்றைத் தந்ததாக வாக்களிப்பவரும் ‘கையடித்துத்’ தருதல் உண்டு. ஒருவர் கைமேல் ஒருவர் கையை வைத்து… Read More »கையடித்தல்

கைப்பிடித்தல் – மணமுடித்தல்

சொல் பொருள் கைப்பிடித்தல் – மணமுடித்தல் சொல் பொருள் விளக்கம் கையைப் பிடித்தல் என்னும் பொருளை விடுத்துத் திருமணம் என்னும் பொருளைத் தருவது கைப்பிடித்தலாம். திருமண நிறைவேற்றத்தின் பின்னர் பெண்ணைப் பெற்றவர் மாப்பிள்ளையின் கையில்… Read More »கைப்பிடித்தல் – மணமுடித்தல்

கைந்நீளல்

சொல் பொருள் கைந்நீளல் – தாராளம், அடித்தல் , திருடல் சொல் பொருள் விளக்கம் கைந்நீட்டல் ‘கொடை’ என வழங்கப்படுகிறது. “அவன் கைநீட்ட மாட்டான்” என்பது கொடான் என்னும் குறிப்பினதாம். ‘கைந்நீளம்’ என்பது கையின்… Read More »கைந்நீளல்

கைத்தூய்மை

சொல் பொருள் கைத்தூய்மை – களவு திருட்டுச் செய்யாமை சொல் பொருள் விளக்கம் ‘கைசுத்தம்’ என்பர். கைசுத்தம் நீரால் கழுவுவதால் ஏற்படும். இது, களவு, திருட்டு எனக்கொள்ளாமையால் ஏற்படுவது. கையும் வாயும் சுத்தமாக இருந்தால்… Read More »கைத்தூய்மை