Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

விளக்கேற்றல்

சொல் பொருள் விளக்கேற்றல் – குடித்தனமாக்கல் சொல் பொருள் விளக்கம் புதுமனை புகுவிழாவில் விளக்கேற்றல் சிறப்பிடம் பெறும் நிகழ்ச்சியாகும். சில நிறுவனத் தொடக்க விழாக்களிலும் விளக்கேற்றல் முதல் நிகழ்ச்சியாக நிகழ்கின்றன. திருமணமாகி மணமகன் வீடு… Read More »விளக்கேற்றல்

விளக்கெண்ணெய்

சொல் பொருள் விளக்கெண்ணெய் – வழுக்குதல், சறுக்குதல் சொல் பொருள் விளக்கம் விளக்கெண்ணெய், ஆமணக்கு எண்ணெயாம். விளக்கு எரிக்கப் பயன்பட்ட பழங்கால நிலையில் பெற்ற பெயர் அது. விளக்கெரிக்க வேறு எண்ணெய்கள் வந்த பின்னரும்,… Read More »விளக்கெண்ணெய்

விழுந்து எழுதல்

சொல் பொருள் விழுந்து எழுதல் – வறுமைப்பட்டு வளமையாதல் சொல் பொருள் விளக்கம் கீழே விழுதலும், விழுந்தவர் காலூன்றியும் கையூன்றியும் எழுதலும் வழக்கே. இவ்வழக்கில் இருந்து பொருள் நிலையில் வீழ்ச்சியடைதல் விழுதலாகவும், பின்னர் அரிதின்… Read More »விழுந்து எழுதல்

விலைபோதல்

சொல் பொருள் விலைபோதல் – திறமையால் பெருமையடைதல் சொல் பொருள் விளக்கம் திறமையான சிலர் எங்கே போனாலும் செல்வாக்குடன் விளங்குவர். அவரை ‘விலைபோகின்ற சரக்கு அது’ எனப் பாராட்டுவர். நல்ல சரக்காக இருந்தால் தேடி… Read More »விலைபோதல்

விலைபோகாது

சொல் பொருள் விலைபோகாது – ஏற்கப்படாது சொல் பொருள் விளக்கம் “அந்தச் சரக்கெல்லாம் இங்கு விலைபோகாது அல்லது விலையாகாது” என்பது சொன்முறை. சரக்கு என்பதால் வணிகம் என்பதும், விலை என்பதால் கொடுக்கல் வாங்கல் என்பதும்… Read More »விலைபோகாது

விலாங்கு (மலங்கு)

சொல் பொருள் விலாங்கு (மலங்கு) – ஏமாற்று சொல் பொருள் விளக்கம் விலாங்கு ஒருவகை மீன். அது பார்வையில் மீன்போலவும் தோன்றும்; பாம்புபோலவும் தோன்றும். அதனால், விலாங்கைப் “பாம்புக்குத் தலையும்’ மீனுக்கு வாலும் காட்டும்”… Read More »விலாங்கு (மலங்கு)

விருந்து வைத்தல்

சொல் பொருள் விருந்து வைத்தல் – திருமணம் முடித்தல் சொல் பொருள் விளக்கம் திருமண நிகழ்ச்சியில் முதன்மையானது தாலிகட்டல்.திருமணச் சிறப்பில் முதன்மையானது விருந்து. ஆதலால் திருமணமாக வேண்டிய அகவையினரைக் காணுங்கால் “எப்பொழுது விருந்து வைக்கப்போகிறீர்?”… Read More »விருந்து வைத்தல்

விரல் வைத்தல்

சொல் பொருள் விரல் வைத்தல் – தலையிடுதல், தொடுதல், எச்சரித்தல் சொல் பொருள் விளக்கம் “என்னைத் தொடு பார்க்கலாம்” என ஓட்டப் பந்தயம் ஓடுவது விளையாட்டு. “என்னைத் தொடு பார்க்கலாம்; உயிரோடு திரும்பி விடுவாயோ?”… Read More »விரல் வைத்தல்

விடிவுக் காலம்

சொல் பொருள் விடிவுக் காலம் – நற்காலம் சொல் பொருள் விளக்கம் விடிகாலம், விடிபொழுது, வைகறை, காலை என்பன கதிரோன் எழுந்து இருளகல ஒளிபரவும் பொழுதாம். அவ்விடிகாலம் மகிழ்ச்சி சுறுசுறுப்பு ஆகியவை ஏற்படும். பொழுது… Read More »விடிவுக் காலம்

விடியாமூஞ்சி

சொல் பொருள் விடியாமூஞ்சி – கிளர்ச்சியில்லா முகம் சொல் பொருள் விளக்கம் விடியாமை, பொழுது புறப்படாமை. பொழுது புறப்படாப் பொழுதில் இருள் கப்பிக்கிடக்கும். அப்பொழுதில் முகமும் இருள்படிந்து கிடக்கும். விடியாப் பொழுதில் பார்க்கும் முகத்தைப்… Read More »விடியாமூஞ்சி