Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

தேய்த்துப்போட்டகல்

சொல் பொருள் தேய்த்துப்போட்டகல்- இழிவுறுத்தல், அருவறுத்தல் சொல் பொருள் விளக்கம் காலில் ஏதாவது படக் கூடாத அருவறுப்புப் பட்டுவிட்டால் கண்ணில் காணப்பட்ட கல்லில் காலைத் தேய்த்து ஓரளவு அருவறுப்பைத் துடைத்துக் கொள்ளுதல் நடைமுறை. அத்… Read More »தேய்த்துப்போட்டகல்

தெளியக்கடைந்தவன்

சொல் பொருள் தெளியக்கடைந்தவன் – தேர்ந்தவன் சொல் பொருள் விளக்கம் சிறுவயதிலேயே சில சிக்கலான வினாக்களை ஒருவன் எழுப்பினாலும், ஒருவர் சொன்னதை மறுத்து உரையாடி னாலும் ‘தெளியக்கடைந்தவன்’ என்பர். தெளியக் கடைதல் என்பது கடைந்த… Read More »தெளியக்கடைந்தவன்

தெரிப்பெடுத்தல்

சொல் பொருள் தெரிப்பெடுத்தல் – கண்டுபிடித்தல் சொல் பொருள் விளக்கம் ஒரு பொருள் களவு போய் விடுமானால் உடுக்கடித்துக் கேட்டலும், மையோட்டம் பார்த்து காணலும் நாட்டுப்புறத்தில் இன்று மாறிற்றில்லை. கோடாங்கி சொல்லும் குறிப்பறிந்து போய்… Read More »தெரிப்பெடுத்தல்

தூர்த்து மெழுகல்

சொல் பொருள் தூர்த்து மெழுகல் – ஒன்றும் இல்லாது அழித்தல் சொல் பொருள் விளக்கம் தூர்த்தல் – பெருக்குதல்; மெழுகல் – துடைத்தல். தூர்த்து மெழுகல் தூய்மையுறுத்தும் பணிகளாம். அத்தூய்மைப் பணியைச் சுட்டாமல், தூர்த்து… Read More »தூர்த்து மெழுகல்

தூண்டில் போடல்

சொல் பொருள் தூண்டில் போடல் – சிக்கவைத்தல் சொல் பொருள் விளக்கம் தூண்டில் போடுவது மீனைப் பிடிப்பதற்காக. இங்கே அவ்வாறு தூண்டில்முள், இல்லாமல் தந்திரங்களாலேயே பிறரைச் சிக்கவைத்து அவர்கள் பொருள்களையும் அல்லது அவர்களையே கூடக்… Read More »தூண்டில் போடல்

தூசிதட்டல்

சொல் பொருள் தூசிதட்டல் – விலைபோகாதிருத்தல் சொல் பொருள் விளக்கம் ஈயோட்டல், கொசுவிரட்டல் என்பன போல்வது தூசி தட்டல். காலையில் கடை திறந்ததும் கடையில் பிடித்துள்ள தூசியைத் துடைத்தலும், பெருக்குதலும் கடைப்பொருள்களில் படிந்துள்ள தூசியைத்… Read More »தூசிதட்டல்

துருவல்

சொல் பொருள் துருவல் – தேடல், ஆராய்தல் சொல் பொருள் விளக்கம் துருவுதல் நுண்ணிதாகத் துளைத்தல் பொருளது. தேங்காய் துருவுதல், துரப்பணம் செய்தல், துரவு (கிணறு) என்பவற்றை நோக்கின் நுணுக்கமாகத் துளைத்தல் பொருளதென்பது துலங்கும்.… Read More »துருவல்

துணியைக் கிழித்தல்

சொல் பொருள் துணியைக் கிழித்தல் – கிறுக்காதல் சொல் பொருள் விளக்கம் “சீலையைக் கிழித்தல்” என்னும் வழக்குப் போல்வது. துணி என்பது துண்டித்தல் என்னும் பொருளில் வருவது எனினும், அதனை முழுமையான சீலை, வேட்டி,… Read More »துணியைக் கிழித்தல்

துணியைத் தாண்டல்

சொல் பொருள் துணியைத் தாண்டல் – உறுதி மொழிதல் சொல் பொருள் விளக்கம் மெய்கூறல் (சத்தியம் செய்தல்) என்பதன் முறைகளுள் ஒன்று துணியைத் தாண்டல், பிள்ளையைப் போட்டுத் தாண்டலும் இத்தகைத்தே. பிள்ளையைப் போட்டுத் தாண்டலாகக்… Read More »துணியைத் தாண்டல்

துடைத்தல்

சொல் பொருள் துடைத்தல் – இல்லாது செய்தல் சொல் பொருள் விளக்கம் துடைத்தல் என்பது தடவுதல் பொருளை விடுத்து துடைத்து எடுத்தலைக் குறித்து வழக்கில் உள்ளது. ‘தண்ணீரைத் துடை’ என்றால் ஈரப்பதமும் இல்லாமல் ஆக்கலைக்… Read More »துடைத்தல்