Skip to content

தூர்த்து மெழுகல்

சொல் பொருள்

தூர்த்து மெழுகல் – ஒன்றும் இல்லாது அழித்தல்

சொல் பொருள் விளக்கம்

தூர்த்தல் – பெருக்குதல்; மெழுகல் – துடைத்தல். தூர்த்து மெழுகல் தூய்மையுறுத்தும் பணிகளாம். அத்தூய்மைப் பணியைச் சுட்டாமல், தூர்த்து மெழுகப்பட்ட இடத்தில் ஒரு சிறு தூசியும் தும்பும் கூட இல்லாமல்போகும் அல்லவா; அவ்வாறு எந்த ஒன்றும் இல்லாமல் வெறுமையாக்குவது தூர்த்து மெழுகலாக வழங்குகின்றதாம். “ஒரு வாரம் வீட்டில் இருந்தான்(ள்) தூர்த்து மெழுகி விட்டுப் போய் விட்டான்(ள்)” என்பது இப்பொருளை விளக்கும்.

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *