Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

முட்டை

1. சொல் பொருள் பூ மொட்டு 2. சொல் பொருள் விளக்கம் பூ அரும்பு திரண்ட நிலையில் மொக்கு என்றும், மொட்டு என்றும் வழங்குதல் பொது வழக்கு. அதனை முட்டை என்பது கொங்கு நாட்டு… Read More »முட்டை

முட்டி

சொல் பொருள் வட்டி சொல் பொருள் விளக்கம் தட்டு முட்டு என்பது சமையலறைப் பொருள்கள். பிச்சை முட்டி என்பது இணைச் சொல். முட்டி என்பது வட்டி என்னும் பொருளில் சென்னை வட்டாரத்தில் வழங்குகின்றது. முட்டிக்… Read More »முட்டி

முக்குணி

சொல் பொருள் அது போல் மூன்று குமிழ் உடைய அடுப்பு சொல் பொருள் விளக்கம் அடுப்புக் கூட்டு என்பது ஆய்த எழுத்தின் வடிவு. முப்பாற்புள்ளி என்பதும் அது. காதணிகளுள் ஒன்று முக்கட்டு. மூன்றுகல் உடையது.… Read More »முக்குணி

முக்காணி

சொல் பொருள் கட்டைவண்டியின் முகப்புத் தாங்கலாகக் குரங்குக் கட்டை என ஒரு வளைகட்டை சொல் பொருள் விளக்கம் கட்டைவண்டியின் முகப்புத் தாங்கலாகக் குரங்குக் கட்டை என ஒரு வளைகட்டை உண்டு. அதன் வளைவு கருதிய… Read More »முக்காணி

முக்கட்டு

சொல் பொருள் மூன்று கல்லை வைத்துக் கட்டுதலால் அமைந்த காதணி சொல் பொருள் விளக்கம் மூன்று கட்டு என்னும் பொருளில் வருவது அன்று முக்கட்டு என்னும் அணிகலம். மூன்று கல்லை வைத்துக் கட்டுதலால் அமைந்த… Read More »முக்கட்டு

மிளகாய்க் கல்

சொல் பொருள் அரைகல், அரைசிலை, அம்மி சொல் பொருள் விளக்கம் அரைகல், அரைசிலை, அம்மி என்னும் பொருள் பொது வழக்கானது. அதனை மிளகாய்க் கல் என்பது திண்டுக்கல் வட்டார வழக்காகும். மிளகாய் என்பது பல… Read More »மிளகாய்க் கல்

மிதிதும்பை

சொல் பொருள் கால்மிதி சொல் பொருள் விளக்கம் கால்மிதியாகப் பயன்படுவதை மிதிதும்பை என்பது நெல்லை வழக்கு. தும்பு என்பது பலவகை முடிப்புகளை உடையது. ஆதலால் பின்னல் அமைப்பு உடைய கால் மிகுதியைக் குறித்துப் பின்னர்ப்… Read More »மிதிதும்பை

மாறுகாற்று

சொல் பொருள் கோடைக் காற்று மேல் காற்று சொல் பொருள் விளக்கம் காலம் என்பது கார் காலத்தையே குறிக்கும். காற்று என்பது கிழக்கில் இருந்து நீர் கொண்டுவரும் காற்றையே குறிக்கும். அதற்கு மாறான காற்று… Read More »மாறுகாற்று

மாறிவருதல்

சொல் பொருள் ஒருபொருளை விற்று வருதலைக் குறிப்பது சொல் பொருள் விளக்கம் மாறிவருதல் என்பது ஒருபொருளை விற்று வருதலைக் குறிப்பது. கைம்மாறு கைம்மாற்று என்பதும் எண்ணத்தகும். சிலம்பில் “மாறிவருவன்” எனவருவது இலக்கிய ஆட்சி. திருச்சி… Read More »மாறிவருதல்

மாலை பூத்தல்

சொல் பொருள் திருமணம் சொல் பொருள் விளக்கம் திருமணம் என்பதற்குரிய வழக்குச் சொற்களும் வட்டார வழக்குச் சொற்களும் மிகப்பல. அவற்றுள் ஒன்று மாலை பூத்தல் என்பது. இது முகவை நெல்லை வழக்காகும். குறிப்பு: இது… Read More »மாலை பூத்தல்