Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

பந்தற் பருக்கை

சொல் பொருள் மேற்கட்டுக் கட்டாமல் போடப்படும் கீற்றுத் தடுப்பு. அப்பந்தலில் படைக்கப்படும் சோறு பந்தற் பருக்கை எனப்படுகிறது. பருக்கை அரிசிச் சோறு. சொல் பொருள் விளக்கம் பந்தல் பூப்பந்தல், கொடிப்பந்தல் என்னும் பொதுப் பொருளில்… Read More »பந்தற் பருக்கை

பதனம்

சொல் பொருள் பதனம் என்பது மெல்லென மெதுவாக என்னும் பொருளில் வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் பதம் பதன் என்பவை பக்குவம் என்னும் பொதுப் பொருள் குறிப்பன. அந்த ஏனத்தைப் பதனமாகவை, பதனமாக எடு… Read More »பதனம்

பதனங்காய்

சொல் பொருள் கத்தரிக்காய் சொல் பொருள் விளக்கம் வழுவழுப்பான தோலமைந்த காய் கத்தரிக்காய். மிகு பிஞ்சும் மிகு முற்றலும் சுவையற்றவை; கேடும் செய்வன. அதன் இடைநிலை உடல் நலத்திற்கு ஊறு செய்யாது அதனை அறிந்து… Read More »பதனங்காய்

பதவல்

சொல் பொருள் பதவல் என்பது மிகுதிப் பொருள் பெற்றது. பதவல் – கூட்டம் சொல் பொருள் விளக்கம் பதவல் என்பது நிரம்ப என்னும் பொருளது. பதம் என்பது நீர்ப்பதம். பதத்துப் போயிருத்தல் என்பது நீர்… Read More »பதவல்

பதப்பு

சொல் பொருள் தலையின் உச்சி பள்ளம். பதப்பு என்பது குளிர்ச்சி என்னும் பொருளதாம் சொல் பொருள் விளக்கம் தலையின் உச்சியில் ஒவ்வொருவர்க்கும் ஒரு பள்ளம் உண்டு. குழந்தை நிலையில் அப்பள்ளம் நன்றாகப் புலப்படும். அதனைப்… Read More »பதப்பு

பத்தல் மடை

சொல் பொருள் கிணற்றில் கமலை பூட்டி இறைத்து எடுக்கும் நீர் பத்தல் வழியாக வந்து, மடையில் பாய்ந்து வெளிப்படும் பத்தல் மடை என்பவற்றை இணைத்த சொல் பத்தல் மடை சொல் பொருள் விளக்கம் கிணற்றில்… Read More »பத்தல் மடை

பத்தடப்பு

சொல் பொருள் பத்து அடப்பு என்பவை பற்று அடைப்பு என்பதாம். ஒன்றோடு ஒன்றைப் பொருத்தி வைப்பது பற்ற வைப்பது ஆகும் சொல் பொருள் விளக்கம் பிரிந்து போன இருவரை அல்லது இரு கூட்டங்களை இணைத்து… Read More »பத்தடப்பு

பண்டுவர்

சொல் பொருள் மருத்துவர் சொல் பொருள் விளக்கம் பண்டுவம், பண்டுவர் என்னும் சொற்களை மிகுதியாக ஆட்சிக்குக் கொண்டு வந்தார் பாவாணர். பண்டுவர் என்பது மருத்துவர் எனவும், பண்டுவம் என்பது மருத்துவம் எனவும் பொருள் கொண்டு… Read More »பண்டுவர்

பண்டடை

சொல் பொருள் பண்டத்தை உள்வைத்து வெயில் மழையால் கேடு வராமல் பல திங்களுக்குக் காப்பதற்கு அமைப்பது பண்டடையாகும் சொல் பொருள் விளக்கம் பண்டத்தை உள்வைத்து வெயில் மழையால் கேடு வராமல் பல திங்களுக்குக் காப்பதற்கு… Read More »பண்டடை

படைக்கால்

படைக்கால்

படைக்கால் என்பது நீரோடும் படை வாய்க்கால் 1. சொல் பொருள் (பெ) 1. நீரோடும் படை வாய்க்கால், 2. கொழுவைப் பொறுத்தும் ஏர் நுனி 2. சொல் பொருள் விளக்கம் உழுவார் பாத்தி கட்டுவதற்குச் சால்… Read More »படைக்கால்