Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

குசல்

சொல் பொருள் குசல் என்பது கோள் என்னும் பொருளில் வழங்கும் வட்டாரச் சொல்லாகக் குமரிப் பகுதியில் வழங்குகிறது. கோள் கூறுதல் அல்லது கோள் சொல்லுதலைக் ‘குசலம்’ என்பது திருச்சிராப்பள்ளி, கருவூர் வட்டார வழக்கு சொல்… Read More »குசல்

குச்சிக் காலி

சொல் பொருள் ஊர் காவல் கடமையுடைய போலீசுக்காரர் சொல் பொருள் விளக்கம் குச்சிக் கால் நாரைக்கும் கொக்குக்கும் உண்டு. குச்சிபோல் நீண்ட காலைக் குறிப்பது அது. இக்குச்சிக் காலி, ஊர் காவல் கடமையுடைய போலீசுக்காரர்… Read More »குச்சிக் காலி

குச்சரி

சொல் பொருள் குச்சரி என்பது நொய்யரிசி, நொறுங்கு அரிசி என்னும் பொருளில் தக்கலை வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் கு என்பது குறுமைப் பொருள் முன்னொட்டு. எ-டு: குக்கிராமம் குக்கல் முடங்கிக்… Read More »குச்சரி

குக்கு

1. சொல் பொருள் குக்கு என்பது குந்துதல் பொருள் தருவது கொங்கு நாட்டு வழக்காகும். 2. சொல் பொருள் விளக்கம் உட்கார் என்பதைக் ‘குந்து’ என்பதும் குத்தவை என்பதும் வழக்கு. முன்னது பெருவழக்கு. பின்னது… Read More »குக்கு

கீறி

சொல் பொருள் கீறி என்பதற்குக் கோழி என்னும் பொருள் உள்ளமை குற்றால வட்டார வழக்கு ஆகும் சொல் பொருள் விளக்கம் விறகைக் கீறுதல் – பிளத்தல் – பொதுவழக்கு. கீறல் என விரல் வரி… Read More »கீறி

கீரி

சொல் பொருள் கீரி என்பது ஒலியால் ஏற்பட்ட ஊருயிரியின் பெயர் சொல் பொருள் விளக்கம் கீரி என்பது ஒலியால் ஏற்பட்ட ஊருயிரியின் பெயர். ‘கீர் கீர்’ என்பது ஒலி. பொருள் புரியாமல் ஒலிக்கும் ஒலியுடையது… Read More »கீரி

கிளையல்

சொல் பொருள் பன்றி தோண்டுதல் கிளைத்தல் ஆகும். கிளைக்க உதவும் கருவியாகிய மண் வெட்டியைக் கிளையல் என்பது கருங்கல் வட்டார வழக்காகும். சொல் பொருள் விளக்கம் கிளைத்தல், தோண்டுதல் என்னும் பொருளில் வழங்குகின்றது. கிண்டுதல்… Read More »கிளையல்

கிளித்தல்

சொல் பொருள் கிளித்தல் என்பது வசை; வசவுச் சொல் சொல் பொருள் விளக்கம் கிழித்தல் என்பது இல்லை கிளித்தல். “அவனை நேற்றுக் கிளி கிளியாகக் கிளித்தும் சூடு சொரணை இல்லை” என்பது பழிப்புச் சொல்.… Read More »கிளித்தல்

கிளிக்கால்

சொல் பொருள் கமலைக் கிணற்றில் கீழ்க்குத்துக்காலும் மேற்குத்துக்காலும் என இருவகைக் குத்துக்கால்கள் உண்டு. அவற்றுள் மேற்குத்துக்காலை, கிளிக்கால் என்பது இறையூர் வட்டார வழக்கு. சொல் பொருள் விளக்கம் கமலைக் கிணற்றில் கீழ்க்குத்துக்காலும் மேற்குத்துக்காலும் என… Read More »கிளிக்கால்

கிள்ளுதல்

சொல் பொருள் கிள்ளுதல் கொடிக்கால் வழக்காகும். வெற்றிலை பறித்தலை அது குறிக்கும். கிள்ளி எடுக்கும் ஓலையும் ஓலைக் கடிதமும் கிள்ளாக்கு எனப்படுதல் கடந்த கால வழக்கு சொல் பொருள் விளக்கம் விளையாட்டாகவும், தண்டிப்பாகவும் கிள்ளுதல்… Read More »கிள்ளுதல்