Skip to content

அ வரிசைச் சொற்கள்

அ வரிசைச் சொற்கள், அ வரிசைத் தமிழ்ச் சொற்கள், அ வரிசையில் சங்க இலக்கியத்தில் காணப்படும் சொற்கள், அ என்ற உயிர் எழுத்தில் தொடங்கும் சொற்கள்

அடங்குதல்

சொல் பொருள் மனம் புறத்துப் பரவாது அறத்தின்கண்ணே நிற்றல். சொல் பொருள் விளக்கம் மனம் புறத்துப் பரவாது அறத்தின்கண்ணே நிற்றல். (திருக். 130. பரி.) குறள் 130 அடக்கமுடைமை கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்விஅறம்பார்க்கும்… Read More »அடங்குதல்

அடக்கியல்

சொல் பொருள் உள்ளுறுப்பின் பொருளெல்லாம் ஒரு வகையான் அடக்கும் இயல்பிற்று ஆகலின் அடக்கியல் சொல் பொருள் விளக்கம் உள்ளுறுப்பின் பொருளெல்லாம் ஒரு வகையான் அடக்கும் இயல்பிற்று ஆகலின் அடக்கியல். (தொல். பொருள். 444. பேரா.)

அட்டைக்குழி

சொல் பொருள் நரகம் சொல் பொருள் விளக்கம் அட்டைக்குழி, இருளுலகம், அளறு என நரகிற்குப் பெயரிருப்பதால், அட்டையிட்ட குழியிலும், இருட்டறையிலும், உளையிலும், பண்டைக் காலத்தில் குற்றவாளிகள் தள்ளப்பட்டனர் என்பது வெளியாகும்.(சொல். கட். 24.)

அசுணமா

சொல் பொருள் இசை அறிவதொரு விலங்கு. (சீவக. 1402. நச்.) சொல் பொருள் விளக்கம் இசை அறிவதொரு விலங்கு. (சீவக. 1402. நச்.) ஆங்கிலம் a bird of tamil country that had sense of music, according to ancient tamil literatures. பயன்பாடு பாடல் 88; பாடியவர்:– ஈழத்துப் பூதந்தேவன்… Read More »அசுணமா

அச்சம்

சொல் பொருள் குறிப்பு இன்றியே தோன்றும் நடுக்கம் பெண்மையின் தான் காணப் படாததோர் பொருள் கண்ட இடத்து அஞ்சுவது சொல் பொருள் விளக்கம் (1) அச்சம் என்பது குறிப்பு இன்றியே தோன்றும் நடுக்கம். (இறையனார்.… Read More »அச்சம்

அங்காடி பாரித்தல்

சொல் பொருள் பேராசையினால் ஒருவன் ஆகாத காரியத்தை நம்பி ஆகாயக் கோட்டை கட்டுவதும் ‘அங்காடி பாரித்தல்’ எனப்படும் சொல் பொருள் விளக்கம் ஒரு கடைக்காரன் பேரூதியங் கருதி அளவுக்கு மிஞ்சிய பண்டங்களைக் கடையிற் கொண்டு… Read More »அங்காடி பாரித்தல்

அங்கதம்

சொல் பொருள் அங்கதம் என்பது வசை சொல் பொருள் விளக்கம் அங்கதம் என்பது வசை; அதனை இருவாற்றால் கூறுக என்பான் இதுகூறினான்… வாய் காவாது சொல்லப்பட்ட வசையே செம்பொருள் அங்கதம் எனப்படும்… வசைப் பொருளினைச்… Read More »அங்கதம்

அகவல்

சொல் பொருள் அகவிக் கூறுதலான் (அழைத்தல்) அகவல் எனக் கூறப்பட்டது சொல் பொருள் விளக்கம் அகவிக் கூறுதலான் (அழைத்தல்) அகவல் எனக் கூறப்பட்டது. அஃதாவது, கூற்றும் மாற்றமும் ஆகி ஒருவன் கேட்ப அவற்கு ஒன்று… Read More »அகவல்

அகலவுரை

சொல் பொருள் விரிவாக எழுதும் உரை அகலவுரை : சூத்திரத்துப் பொருளைத் தூய்மை செய்தற்குக் கடாவிடை உள்ளுறுத்து உரைக்கும் உரையெல்லாம் அகலவுரை எனக் கொள்க. (இறையனார். 1. நக்.) சொல் பொருள் விளக்கம் அகலவுரை… Read More »அகலவுரை

அகரம்

சொல் பொருள் அறம் பொருள் இன்பம் என்னும் முப்பொருளின் முதற் பொருட்கும் அருள் அன்பு அணி அழகு முதலாயின நற்பொருட்கும் முதலாயும் வருதலானும் அகரம் முன் வைக்கப்பட்டது. அகரம் மருத நிலத்தூர். மருதநிலம் வயற்பாங்கு.… Read More »அகரம்