Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

வாட்டம்

சொல் பொருள் வாட்டம் – செழிப்பின்மை, வருந்துதல், வழிதல் வாட்டம் – நீர்வாட்டம் வாட்டம் – பசி, வாடுதல் சொல் பொருள் விளக்கம் பயிர் வாட்டமாக இருக்கிறது என்றால் நீர் இல்லாமல் காய்ந்து கிடக்கிறது… Read More »வாட்டம்

வளைதல்

சொல் பொருள் வளைதல் – பயன்கருதிச் சுற்றிவருதல் சொல் பொருள் விளக்கம் தனக்கு ஆகவேண்டிய ஒன்றைக் கருதிப் பன்முறை வந்து பார்த்தலும் பேசுதலும் வளைதல் என்றும் வளைய வருதல் என்றும் சொல்லப்படும். வீட்டைச் சுற்றுதலும்… Read More »வளைதல்

வளைகாப்புப் போடல்

சொல் பொருள் வளைகாப்புப் போடல் – மகப்பேற்றுக்கு அழைப்பு விழா சொல் பொருள் விளக்கம் வளையலும் காப்பும் போடுதல் பிறந்த குழந்தைப் பருவந்தொட்டே நடக்கத் தொடங்குவது. அதனைக் குறியாமல் ‘வளைகாப்புப் போடல்’ கருக்கொண்ட மகளை… Read More »வளைகாப்புப் போடல்

வள்ளல்

சொல் பொருள் வள்ளல் – கருமி சொல் பொருள் விளக்கம் இல்லை என்னாமல் எல்லை இன்றி வழங்குவது வள்ளன்மை எனப்படும். நீயே என் கொடைப் பொருள் என ஒரு கோடு போட்டால் அக்கோட்டைக் கடந்து… Read More »வள்ளல்

வழுக்கை

சொல் பொருள் வழுக்கை – வழுக்கிக்கொண்டு செல்லல் சொல் பொருள் விளக்கம் வழுக்கும் இடமும், வழுக்கும் பொருளும் வழுக்கையாம். முன்னது வரப்பு வழுக்கல்; பின்னது இளநீரில் வழுக்கை. தலை வழுக்கை வழுக்கையுமாம் மழுக்கையுமாம். முழுக்க… Read More »வழுக்கை

வழுக்குதல்

சொல் பொருள் வழுக்குதல் – ஒழுக்கம் தவறல் சொல் பொருள் விளக்கம் வழுக்கி விழுதல் என்பதும் அது. ‘வழுக்கி விழுந்தவள்’ எனப் பெண்ணைப் பழிக்கும் ஆணுலகம் – ஏன் பெண்ணுலகமும் கூட, ஆணை வழுக்கி… Read More »வழுக்குதல்

வழிக்குவராமை

சொல் பொருள் வழிக்குவராமை – ஒருவர் செயலில் குறுக்கிடாமை சொல் பொருள் விளக்கம் வழிக்கு வருதல், நெறிப்படல், ஒழுங்குறல் என்னும் பொருள. அவ்வழிக்கு வராதவனைப் பார்த்து ‘எங்கள் வழிக்கு நீ வராதே’ என ஒதுக்கி… Read More »வழிக்குவராமை

வலைவீசுதல்

சொல் பொருள் வலைவீசுதல் – அகப்படுத்துதல் சொல் பொருள் விளக்கம் வலைவீசுதல் என்பது மீன்பிடிப்பதற்காகச் செய்யப்படுவது. வலைவீசல், வலைபோடல், தூண்டில் போடல் என்பனவும் மீனை அகப்படுத்துவதற்கு அல்லது சிக்கவைப்பதற்குச் செய்யும் செயலேயாம். அதே போல்… Read More »வலைவீசுதல்

வரிதல்

சொல் பொருள் வரிதல் – எழுதுதல், கட்டுதல் சொல் பொருள் விளக்கம் வரி என்பது கோடு, வரிதல் எழுதுதல் பொருளது. “என்ன வரிகிறாய்?” வரிந்து தள்ளுகிறாயே எதை?” என்பவற்றில் வரிதல் எழுதுதல் பொருளாதல் அறிக.… Read More »வரிதல்

வர்த்திவைத்தல்

சொல் பொருள் வர்த்திவைத்தல் – மூட்டிவிடல், இல்லாததும் பொல்லாததும் சொல்லல் சொல் பொருள் விளக்கம் வர்த்தி, மெழுகுவர்த்தி, தீவர்த்தி முதலியவை. ஒன்றைப் பற்ற வைத்து அவ்வொன்றால் பலப்பலவற்றைப் பற்ற வைப்பது போன்றது வர்த்தி வைத்தல்.… Read More »வர்த்திவைத்தல்