Skip to content

சொல் பொருள்

வளைதல் – பயன்கருதிச் சுற்றிவருதல்

சொல் பொருள் விளக்கம்

தனக்கு ஆகவேண்டிய ஒன்றைக் கருதிப் பன்முறை வந்து பார்த்தலும் பேசுதலும் வளைதல் என்றும் வளைய வருதல் என்றும் சொல்லப்படும். வீட்டைச் சுற்றுதலும் ஆளைச் சுற்றுதலும் வளைதல்; அவ்வளைதலும் பல்கால் வருதல் தற்பயன் கருதியதேயன்றிப் பிறிதன்றாம். வாலைக் குழைக்கும் நாய் வளையவரும். வாயைக் குழைக்கும் இவரும், வளைய வருவர். இத்தகையவரே. “சுடக்குப்போட்டால் வருவார்” என்று சொல்லப்படும் இழிவுடையவராம். அன்பால் தாய், சேயையும்; சேய், தாயையும் வளைய வருதல் ஈதன்றாம். “வளையவருகிறானே என்ன புது நாடகம்” என்பது வளைய வருதலை விளக்கும்.

இது ஒரு வழக்குச் சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *