Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

மண்ணைக்கவ்வல்

சொல் பொருள் மண்ணைக்கவ்வல் – தோற்றல் சொல் பொருள் விளக்கம் போரில் குப்புற வீழ்தல் மண்ணைக் கவ்வலாம். மற்போரில் மல்லாக்க வீழ்தலும் முதுகில் மண்படலும் தோல்வியாக வழங்குகின்றது. முன்பு குப்புற வீழ்த்திக் குதிரை ஏறல்… Read More »மண்ணைக்கவ்வல்

மண்ணடித்தல்

சொல் பொருள் மண்ணடித்தல் – கெடுத்தல் சொல் பொருள் விளக்கம் கையில் இருப்பது தேன். அதனை மண்ணில் கொட்டினால் என்னாம் “அங்கணத்துள் சொரிந்த அமிழ்து” என உவமைப்படுத்தினார் திருவள்ளுவர். மண் உயர்ந்ததே, எனினும். உண்ணும்… Read More »மண்ணடித்தல்

மண்டி

சொல் பொருள் மண்டி – கசடன் சொல் பொருள் விளக்கம் எண்ணெய் வைக்கப்பட்ட கலத்தில் அவவெண்ணெய் தீர்ந்த பின்னர்ப் பார்த்தால் அடியில் ‘மண்டி’ கிடக்கும். எண்ணெயில் இருந்த கசடு படிவதே மண்டியாம். சிலரை வெளிப்பட… Read More »மண்டி

மடியைப் பிடித்தல்

சொல் பொருள் மடியைப் பிடித்தல் – இழிவுபடுத்தல்; கடனைக் கேட்டல் சொல் பொருள் விளக்கம் மடி என்பது வேட்டி என்னும் பொருளது. மடி என்பது வயிற்றையும் குறிப்பது. வயிற்றுப் பகுதியில் வேட்டிச் சுற்றில் பணம்… Read More »மடியைப் பிடித்தல்

மடியில் மாங்காயிடல்

சொல் பொருள் மடியில் மாங்காயிடல் – திட்டமிட்டுக் குற்றப்படுத்தல் சொல் பொருள் விளக்கம் மாந்தோப்புப் பக்கம்போனான் ஒருவன். அவன் மேல் குற்றம் சாட்டித் தண்டனை வாங்கித் தரவேண்டும் எனத் தோட்டக்காரன் நினைத்தான். உடனே மரத்தின்… Read More »மடியில் மாங்காயிடல்

மட்டை

சொல் பொருள் மட்டை – கூரற்றவன் சொல் பொருள் விளக்கம் கூர் தேய்ந்தது மட்டை எனப்படும். முழுதாகக் கூர் அழிந்தது முழு மட்டை, மழுமட்டை எனப்படும். கரிக்கோலைச் சீவவேண்டும் (PENCIL) மட்டையாக இருக்கிறது என்பது… Read More »மட்டை

மஞ்சள் நீராட்டு

சொல் பொருள் மஞ்சள் நீராட்டு – பூப்பு நீராட்டு சொல் பொருள் விளக்கம் மஞ்சள் தேய்த்து நீராடல் தமிழ் நாட்டு மகளிர் வழக்கு. ஆனால் அந்நீராட்டைக் குறியாமல் ஆளான அல்லது பூப்படைந்தவளுக்கு மஞ்சள் கலந்த… Read More »மஞ்சள் நீராட்டு

மசக்கை

சொல் பொருள் மசக்கை – உண்டாகியிருத்தல் சொல் பொருள் விளக்கம் மயல், மயர்வு, மயக்கம், மசக்கை என்பனவெல்லாம் ஒரு பொருட் சொற்களே எனினும் இவற்றுள் நுண்ணிய வேறுபாடுகள் உண்டு. மயல் – காதல்; மையல்… Read More »மசக்கை

மக்கு

சொல் பொருள் மக்கு – குப்பை, அறிவிலி சொல் பொருள் விளக்கம் மண்+கு – மட்கு – மக்கு என வந்ததாம். மண்ணோடு மண்ணாகிவிட்டது என்பது மக்குதலாக வழங்குகின்றதாம். மட்குதல் அறிந்தே குப்பையை எடுத்து… Read More »மக்கு

போதல்

சொல் பொருள் போதல் – சாவு சொல் பொருள் விளக்கம் போதல் என்பது ஓரிடம் விடுத்து ஓரிடம் அடைதலைக் குறிக்கும். “போனார் தமக்கோர் புக்கில் உண்டு” என்பது மணிமேகலை. போதல் வருதல் இல்லாமல் ஒரே… Read More »போதல்