Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

உதிர்த்தல்

சொல் பொருள் உதிர்த்தல் – மானங்கெடல் சொல் பொருள் விளக்கம் “அவள் உதுத்துப்போட்டவள், எல்லாம் உதுத்திட்டுத் திரிகிறாள்” என்பவை ஒழுக்கமில்லாதவள்; மானங்கெட்டவள் என்னும் பொருளில் சொல்லப்படும் பழிப்புரை. ‘உதிர்த்தல்’ என்பது பூவுதிர்த்தல், காயுதிர்த்தல் போல… Read More »உதிர்த்தல்

உதவாக்கரை

சொல் பொருள் உதவாக்கரை – பயனற்றவன் சொல் பொருள் விளக்கம் நீரை நெறிப்படுத்தி நிறுத்துவதற்கும் ஓடச் செய்வதற்கும் பயன்படுவது கரை. அக்கரை உதவும் கரையாகும். அச்செயலைச் செய்யப் பயன்படாத கரைகளும் உண்டு. அவை நீர்… Read More »உதவாக்கரை

உடைப்பில் போடல்

சொல் பொருள் உடைப்பில் போடல் – தள்ளிவிடல் சொல் பொருள் விளக்கம் உடைப்பை அடைக்க மண்ணையும் கல்லையும் போடுவர். சிலர் எரிச்சலால் உதவாக் கரைப்பிள்ளைகளையும் வேலைக் காரரையும் உன்னை உடைப்பில் வைக்கலாம்; உடைப்பில் தான்… Read More »உடைப்பில் போடல்

உசுப்பல்

சொல் பொருள் உசுப்பல் – எழுப்பல், ஏவிவிடல் சொல் பொருள் விளக்கம் நாயை ‘ஊச் ஊச்’ எனக் கூப்பிடல் உண்டு. உச்சுக் காட்டல், உச்சுக் காட்டல் – அழைத்தல்; அது படுத்திருந்தால் எழுப்புதலும், ஒன்றன்மேல்… Read More »உசுப்பல்

உச்சுக்கொட்டல்

சொல் பொருள் உச்சுக்கொட்டல் – கேட்டல், ஒப்புக்கொள்ளல், வருத்தம் தெரிவித்தல் சொல் பொருள் விளக்கம் ‘உச்’ ‘உச்’ என்பது வாயின் ஒலிக்குறிப்பு, ஒருவர் வருந்தத் தக்க அல்லது உணர்வூட்டத் தக்க ஒரு செய்தியைச் சொல்லும்போது… Read More »உச்சுக்கொட்டல்

ஈயோட்டல்

சொல் பொருள் ஈயோட்டல் – விலையாகாமை சொல் பொருள் விளக்கம் ஈயோட்டல் நலப்பாடு (சுகாதாரம்) கருதிய செயல், அதனினும் ஈக்கு இடம் கொடாமல் இருப்பது மிக நலப்பாடு. நீர்ப்பொருள் இனிப்புப் பொருள் ஆகியவற்றையே ஈ… Read More »ஈயோட்டல்

ஈமொய்த்தல்

சொல் பொருள் ஈமொய்த்தல் – அடித்தல் சொல் பொருள் விளக்கம் “சொல்வதைக் கேள் ; இல்லையானால் உன்முதுகில் ஈமொய்க்கப் போகிறது” என்பர். கேளாவிட்டால் அடிப்பாராம்; அடித்தால் புண்ணாகுமாம் ; புண்ணானால் ஈமொய்க்குமாம். இவற்றையெல்லாம் அடக்கி… Read More »ஈமொய்த்தல்

இலைவயம்

சொல் பொருள் இலைவயம்-அறக்கொடை சொல் பொருள் விளக்கம் மதிக்கத்தக்க பெருமக்களுக்கு வெற்றிலையில் வைத்துப் பணக்கொடை புரிவது வழக்கம். இலையின்வயமாக வழங்கப் படுதலின் இலைவயமாய்ப் பின்னர் இலவயமாய் அதன் பின்னர் இலவசமாய் வழங்கலாயிற்றாம். இப்பொழுது காசில்லாமல்… Read More »இலைவயம்

இலஞ்சியம்

சொல் பொருள் இலஞ்சியம் – அருமை , அழகு சொல் பொருள் விளக்கம் இலஞ்சி என்பது பன்னிற மலர்கள் வனப்புறத் திகழும் கண்கவர் நீர்நிலையாம். ஏரி, குளம், கண்வாய் என்பவற்றினும் எழில் வாய்யதது இலஞ்சி.… Read More »இலஞ்சியம்

இரும்புக்கடலை

சொல் பொருள் இரும்புக்கடலை – கடினம் சொல் பொருள் விளக்கம் கடலை விரும்பியுண்ணும் உண்டியாம் நிலக்கடலை, (மணிலாக் கொட்டை) என்பது. கொண்டைக்கடலை வடிவிலே செய்யப்பட்டது இரும்புக் கடலை. அதனை வாயிலிட்டு மென்றால் பல் என்னாம்?… Read More »இரும்புக்கடலை