Skip to content

சொல் பொருள்

உசுப்பல் – எழுப்பல், ஏவிவிடல்

சொல் பொருள் விளக்கம்

நாயை ‘ஊச் ஊச்’ எனக் கூப்பிடல் உண்டு. உச்சுக் காட்டல், உச்சுக் காட்டல் – அழைத்தல்; அது படுத்திருந்தால் எழுப்புதலும், ஒன்றன்மேல் ஏவுதலும் உச்சுக்காட்டல் என்று வழங்கும். அவ்வழக்கத்தில் இருந்து உறங்குபவரை எழுப்புதல் ‘உசுப்பல்’ என ஆயிற்று. “எப்படி உசுப்பியும் எழும்பவில்லை’ என்பது கும்பகன்ன உறக்கத்தாரை எழுப்புவார் குறை. உசும்பல் – எழும்புதல். அணிலைப் பிடிக்க நாயை உசுக்காட்டுவார் மிகப் பலர். வேட்டை வேலை உசுக்காட்டல் தானே!

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *