Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

துவரம்

சொல் பொருள் பெரிதும் துவரைப் பயறு இட்டுச் செய்யப்படும் பொறியல் கறியைத் துவரம் என்பது தென்னக வழக்கு சொல் பொருள் விளக்கம் துவர்த் தன்மை உடையது ‘துவரம்’ ஆகும். துவர்ப்பு, துவர்த் தன்மையுடைமையால் பெற்ற… Read More »துவரம்

துவக்கு

சொல் பொருள் துப்பாக்கி சொல் பொருள் விளக்கம் துப்பாக்கி என்பதைத் ‘துமுக்கி’ என்றார் பாவாணர். ‘தும்’ ‘டும்’ ‘துமீல்’ ‘டுமீல்’ என்பவை ஒலிக்குறிப்புகள். துமுக்கி என்பதற்கு முற்படத் துவக்கு என்னும் சொல் துப்பாக்கி என்னும்… Read More »துவக்கு

துவ்வல்

சொல் பொருள் தூவி என்பது இறகு. பறவைகளின் இறகு காற்றில் பறத்தல் கண்டு தூவி எனப்பட்டது. தூவுதல் என்பது துவ்வல் ஆகிப் பறவை இறகைக் குறித்தது சொல் பொருள் விளக்கம் தூவி என்பது இறகு.… Read More »துவ்வல்

துல்லியம்

சொல் பொருள் இது சரியாக இவ்வளவு எடை இருக்கும் என மதிப்பிடு வதைத் துல்லியமாக என்பது தென்னக வழக்கு சொல் பொருள் விளக்கம் இது சரியாக இவ்வளவு எடை இருக்கும் என மதிப்பிடு வதைத்… Read More »துல்லியம்

துமித்தல்

சொல் பொருள் துளித்தல், துமித்தல் எனப்படல் கம்பராமாயண வழக்கு. துமித்தல் என்பது துளித்தல் ஆகிய தூவுதல் பொருளில் யாழ்ப்பாண வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் துளித்தல், துமித்தல் எனப்படல் கம்பராமாயண வழக்கு. மோர்த்துளி… Read More »துமித்தல்

தும்பைக் காலி

சொல் பொருள் உவமை வகையால் சலவையைக் குறித்த தும்பை சலவை செய்வாரைக் குறிப்பதாகத் ‘தும்பைக் காலி’ எனப்பட்டது சொல் பொருள் விளக்கம் தும்பைப் பூ நல்ல வெண்ணிறமானது. “சலவை தும்பைப் பூப் போல உள்ளது”… Read More »தும்பைக் காலி

துப்புணி

சொல் பொருள் துப்புணி = எச்சில் (துப்பு நீர்). உமிழ் நீர் என்பதும் அது சொல் பொருள் விளக்கம் ‘துப்பும் நீர்’ எனபதைத் ‘துப்புணி’ என விளவங்கோடு வட்டாரத்தில் வழங்குகின்றனர். தண்ணீர் தண்ணி எனப்படுவது… Read More »துப்புணி

துணித்து

சொல் பொருள் துணித்து என்பதற்குத் துண்டாக்கி என்பது பொதுப் பொருள் சொல் பொருள் விளக்கம் துணித்து என்பதற்குத் துண்டாக்கி என்பது பொதுப் பொருள். துணிக்கப்பட்ட துண்டுக்குத் துணித்து என்பது குமரி வட்டார வழக்கு. தனித்தாக… Read More »துணித்து

துண்டம்

சொல் பொருள் துண்டம் என்பது ஆட்டுத் தரகர் வழக்கில் 60 ஆடுகளைக் குறிப்பதாக வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் ஒரு பெரும் பொருளைப் பகுத்துத் துண்டு போடுவது துண்டு என்றும் துண்டம் என்றும் வழங்கப்பெறும்.… Read More »துண்டம்

துக்காணி

சொல் பொருள் துண்டு என்பதனினும் சிறிது துக்காணி என்பதாம் சொல் பொருள் விளக்கம் ‘துண்டு துக்காணி,’ என்றும் ‘துட்டு துக்காணி’ என்றும்; வழங்கும் இணைச் சொல்லுள் ஒன்று துக்காணி. துண்டு என்பதனினும் சிறிது துக்காணி… Read More »துக்காணி