Skip to content

வழக்குச் சொல்

வழக்குச் சொல், பழமொழி, விடுகதை, தாலாட்டு, ஒப்பாரி இன்ன பல வளங்களெல்லாம் தொகுக்கப் பெறாமலும், விளக்கப் பெறாமலும், நூல் வடிவம் கொள்ளாமலும் ஒழியின், ‘பழமையான கழியவும், புதியன புகவும்’ ஆகி மொழிவளம் காலவெள்ளத்தில் போய்விடக்கூடும். உலக வழக்குக் கொடையாலேயே வெளிப்படுவது இவ்வழக்குச் சொல் அகராதியாகும்.

காவணம்

சொல் பொருள் காவணம் என்பது திருமண மேடைகுறிக்கும் சொல்லாகப் பாலமேடு வட்டார வழக்கில் உள்ளது. செட்டிநாட்டு வழக்கிலும் உண்டு காவணம் – திருமணக்கொட்டகை சொல் பொருள் விளக்கம் பந்தல் என்பது பொதுச்சொல். பொலிவுறுத்துதல், தொங்கல்… Read More »காவணம்

காவடி

சொல் பொருள் நுகக்கோல் (நுகத்தடி, மேற்கால்) என்பதைக் குறிக்கின்றது சொல் பொருள் விளக்கம் காவுதடி = காவடி; காவுகின்ற (தாங்குகின்ற) அடி யுடைய தாதலால் காவு அடி எனினும் ஆம். இக்காவடி என்பது உழவர்… Read More »காவடி

காலி

சொல் பொருள் இல்லை என்னும் பொருளில் வழங்குகிறது காலி – ஊர்சுற்றி, போக்கடிப்பு சொல் பொருள் விளக்கம் காலால் நடந்து செல்லும் பசு முதலியவற்றைக் காலி என்பது பொதுவழக்கு. கன்றுடன் கூடிய பசு, கன்று… Read More »காலி

கால் குத்தல்

சொல் பொருள் வருதல் கரையில் படகை ஏற்றி ஊன்ற வைத்தல் கால்குத்தல் சொல் பொருள் விளக்கம் திருச்செந்தூர் வட்டாரப் பரதவர் வழக்கில் கால் குத்தல் என்பது வருதல் பொருளில் வழங்குகின்றது. கடலில் சென்றவர்கள் ஆங்கிருந்து… Read More »கால் குத்தல்

கால்கட்டு

சொல் பொருள் திருமணம் சொல் பொருள் விளக்கம் வீட்டில் தங்காமல் அலைந்து திரிபவனையும், கட்டுப்பாடு இல்லாமல் பொறுப்பற்று இருப்பவனையும் உனக்குக் கால் கட்டுப் போட்டால் தான் சரியாகும் என்பது தென்னக வழக்கு. காலில் போடும்… Read More »கால்கட்டு

கால்

சொல் பொருள் குமரி மாவட்ட வழக்கில் கால் என்பது பணம் என்னும் பொருளில் வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் கால் என்பது சக்கரம், வட்டம், உருள் முதலிய பொருள் தரும் சொல். சகடக்கால் என்பது… Read More »கால்

காரை

சொல் பொருள் மதுக்கூர் வட்டாரத்தார் வைக்கோலைக் ‘காரை’ என வழங்குகின்றனர் சொல் பொருள் விளக்கம் மதுக்கூர் வட்டாரத்தார் வைக்கோலைக் ‘காரை’ என வழங்குகின்றனர். கார்காலத்தில் விளையும் நெல் கார்ச் சம்பா. கார்காலத்தில் விளைவதால் காரை… Read More »காரை

காராட்டம்

சொல் பொருள் பொய்ச் சண்டை சொல் பொருள் விளக்கம் போராட்டம் போர்; ஆட்டம் என்பது விளையாட்டு, போராட்டு என்பனவற்றின் பொது. ஆடு என்பது வெற்றி. புதுக்கடை வட்டாரத்தார் காராட்டம் என ஓர் ஆட்டம், வட்டார… Read More »காராட்டம்

காரத் தோசை

சொல் பொருள் அடைத்தோசை சொல் பொருள் விளக்கம் பல்வேறு பருப்புகளும் அரிசியும் மல்லி, கறிவேப் பிலை, உள்ளி முதலியவும் ஆட்டி ஆக்கும் கெட்டியான தோசையை அடைத்தோசை என்பது பொது வழக்கு. அதனைக் காரத்தோசை என்பது… Read More »காரத் தோசை

காரணவர்

சொல் பொருள் தாய் மாமன் சொல் பொருள் விளக்கம் மழையின்றி உலகில் எதுவும் இல்லை ஆதலால் உயிர் வாழ்வுக்கு மழைபெய்தலே (கார் + அணம் = காரணம் (மூலம்) என்றனர். அம்மழைபோல் குடும்ப வாழ்வுக்கு… Read More »காரணவர்