Skip to content

சொல் பொருள்

1 – (வி) 1. உரி, பேர்த்தெடு,  2. இடம்பெயர், 3. நீக்கு, 2. (பெ) உரிக்கப்பட்ட பட்டை அல்லது மேல்தோல், 

சொல் பொருள் விளக்கம்

உரி, பேர்த்தெடு, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

strip off, tear off, tear off displace, remove, eradicate, Bark of a tree; the inner fibrous covering of a bamboo

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

காம்பு சொலித்து அன்ன அறுவை உடீஇ – சிறு 236

மூங்கில் ஆடையை உரித்தாற் போன்றதும் ஆகிய உடையினை உடுக்கச்செய்து,

கிளையொடு
நால் முலை பிணவல் சொலிய கான் ஒழிந்து – அகம் 248/4

தன் கூட்டத்துடன்
தொங்கும் முலையினையுடைய பெண்பன்றி இடம்பெயர, காட்டினின்றும் வெளிவந்து

உண்ணா பிணவின் உயக்கம் சொலிய
நாள்_இரை தரீஇய எழுந்த நீர்நாய் – அகம் 336/3,4

உண்ணாமையால் வருந்திய பெண்நாயின் வருத்தத்தைப் போக்குவதற்கு
காலைப் பொழுதில் இரையினைக் கொண்டுவர எழுந்த நீர்நாய்

பாம்பு உரி அன்ன வடிவின, காம்பின்
கழை படு சொலியின் இழை அணி வாரா
ஒண் பூம் கலிங்கம் – புறம் 383/9-11

பாம்பின் தோல்போன்ற வடிவினை உடையவாய் மூங்கில்
கோலின் உட்புறத்தே உள்ள தோல் போன்ற நெய்யப்பட்ட இழைகளின் வரிசை அறிய இயலாத
ஒள்ளிய பூவால் செய்யப்பட்ட ஆடை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.