Skip to content

சொல் பொருள்

சோடை – உள்ளீடு இல்லாமை

சொல் பொருள் விளக்கம்

நிலக்கடலையுள் ‘சோடை’யுண்டு. சோடை எனப்படுவது ‘பருப்பு இல்லாமல் வெற்றுக் கூடாக இருக்கும் கடலையாகும். கடலையில் ‘சோடை’ மிகுதி என்றும், ‘சோடை போகவில்லை’ என்றும் கூறுவது வழக்கம். அவ்வழக்கில் இருந்து ‘அவன் ஒன்றும் சோடையில்லை’ என்றும் அவன் சோடை என்றும் வழக்கூன்றின. அறிவாற்றல் செயல் தேர்ச்சி இன்மை சோடையாகவும், அவையுண்மை சோடை இன்மையாகவும் வழங்குகின்றன. ‘சொங்கு சோடை’ எனச் சிலர் தன்மையைச் சுட்டுவது உண்டு. சொங்கும் சோடையும் என்பது ஒரு பொருள். சொங்கு காண்க.

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *