Skip to content
சோறு

சோறு என்பது சமைத்த நெல்லரிசி

1. சொல் பொருள்

(பெ)  1. சமைத்த நெல் அரிசி, 2. உணவைக் குறிக்கும் சொற்களில் சோறு என்பது ஒன்று(தக்காளிச் சோறு, கூட்டாஞ்சோறு), 3. ஒரு இயற்கை உணவுக்குள் இருக்கக்கூடிய, உண்ணுவதற்கு உகந்த பொருள்(சோளச்சோறு, கம்மஞ்சோறு, தென்னஞ்சோறு, சோற்றுக் கற்றாழை).

2. சொல் பொருள் விளக்கம்

சங்க காலத்தில் சோறு என்பது அரிசிச் சோற்றுடன் ஏதோ ஒரு பொருளைச் சேர்த்துப் பிசைந்து உண்ணும் உணவைக்
குறிப்பதைக் காணலாம். இன்றைக்கு நாம் பிரியாணி என்று அழைக்கும் உணவு அன்றைக்கு ஊன்சோறு என்று அழைக்கப்பட்டிருக்கிறது. இதைத்தவிர, பொதுவாக நாம் உண்ணும் சாப்பாடு எனப்படும் உணவும் சோறு எனப்படுகிறது.

வரகின் சோறு, வரகில் இருக்கும் உண்ணத் தகுந்த பொருள். தென்னஞ் சோறு : தென்னையில் இருக்கும் உண்ணத்தகுந்த பொருள்.

சோறு முக்கியமாக கறி, குழம்பு, பொறியல், வறுவல், அப்பளம் போன்ற இன்னும் பலவகை இதர பதார்த்தங்களுடன் சேர்த்தே உண்ணல் தமிழர் வழக்காகும்.

சோறு
சோறு

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Boiled Rice.

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

சோறு
சோறு

சாறு கழி வழி நாள் சோறு நசையுறாது – பொரு 2

எயிற்றியர் அட்ட இன் புளி வெம் சோறு/தேமா மேனி சில் வளை ஆயமொடு – சிறு 175,176

அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு/கவை தாள் அலவன் கலவையொடு பெறுகுவிர் – சிறு 194,195

சோறு அடு குழிசி இளக விழூஉம் – பெரும் 366

சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும் தோல் துமிபு – முல் 72

ஆடு-உற்ற ஊன் சோறு/நெறி அறிந்த கடி வாலுவன் – மது 35,36

இன் சோறு தருநர் பல்-வயின் நுகர – மது 535

சோறு அமைவு-உற்ற நீர் உடை கலிங்கம் – மது 721

சோறு வாக்கிய கொழும் கஞ்சி – பட் 44

தென்னஞ் சோறு
தென்னஞ்சோறு

முள் அரித்து இயற்றிய வெள் அரி வெண் சோறு/வண்டு பட கமழும் தேம் பாய் கண்ணி – மலை 465,466

புகர்வை அரிசி பொம்மல் பெரும் சோறு/கவர் படு கையை கழும மாந்தி – நற் 60/5,6

கொடுத்த தந்தை கொழும் சோறு உள்ளாள் – நற் 110/11

விடக்கு உடை பெரும் சோறு உள்ளுவன இருப்ப – நற் 281/6

சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ – நற் 335/5

கரும் கண் கருனை செந்நெல் வெண் சோறு/சூர் உடை பலியொடு கவரிய குறும் கால் – நற் 367/3,4

முழுது உடன் விளைந்த வெண்ணெல் வெம் சோறு/எழு கலத்து ஏந்தினும் சிறிது என் தோழி – குறு 210/3,4

மை ஊன் பெய்த வெண்ணெல் வெண் சோறு/நனை அமை கள்ளின் தேறலொடு மாந்தி – பதி 12/17,18

பெரும் சோறு உகுத்தற்கு எறியும் – பதி 30/43

சோற்றுக் கற்றாழை
சோற்றுக் கற்றாழை

சோறு வேறு என்னா ஊன் துவை அடிசில் – பதி 45/13

சிறு முத்தனை பேணி சிறு சோறு மடுத்து நீ – கலி 59/20

உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு/அயிலை துழந்த அம் புளி சொரிந்து – அகம் 60/4,5

வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறு/புகர் அரை தேக்கின் அகல் இலை மாந்தும் – அகம் 107/9,10

சிற்றில் இழைத்தும் சிறு சோறு குவைஇயும் – அகம் 110/7

ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண் குடை – அகம் 121/12

மைப்பு அற புழுக்கின் நெய் கனி வெண் சோறு/வரையா வண்மையொடு புரையோர் பேணி – அகம் 136/1,2

ஆம்பல் அகல் இலை அமலை வெம் சோறு/தீம் புளி பிரம்பின் திரள் கனி பெய்து – அகம் 196/5,6

பெரும் சோறு கொடுத்த ஞான்றை இரும் பல் – அகம் 233/9

ஈயல் பெய்து அட்ட இன் புளி வெம் சோறு/சேதான் வெண்ணெய் வெம் புறத்து உருக – அகம் 394/5,6

சோளச் சோறு
சோளச்சோறு

கறிசோறு உண்டு வருந்து தொழில் அல்லது – புறம் 14/14

சோறு படுக்கும் தீயோடு – புறம் 20/7

சோறு பட நடத்தி நீ துஞ்சாய் மாறே – புறம் 22/38

அமலை கொழும் சோறு ஆர்ந்த பாணர்க்கு – புறம் 34/14

நறு நெய் கடலை விசைப்ப சோறு அட்டு – புறம் 120/14

சோறு உடை கையர் வீறுவீறு இயங்கும் – புறம் 173/8

பெரும் சோறு பயந்து பல் யாண்டு புரந்த – புறம் 220/1

வான் சோறு கொண்டு தீம் பால் வேண்டும் – புறம் 250/7

கம்மஞ்சோறு
கம்மஞ்சோறு

துடுப்பொடு சிவணிய களி கொள் வெண் சோறு/உண்டு இனிது இருந்த பின் – புறம் 328/11,12

போகு பலி வெண் சோறு போல – புறம் 331/12

சோறு கொடுத்து மிக பெரிதும் – புறம் 362/14

நறு நெய் உருக்கி நாள்சோறு ஈயா – புறம் 379/9

நறு நெய்ய சோறு என்கோ – புறம் 396/18

பழம் சோறு அயிலும் முழங்கு நீர் படப்பை – புறம் 399/11

புகழ் பட பண்ணிய பேர் ஊன் சோறும்/கீழ் செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும் – மது 533,534

அட்டு ஆன்று ஆனா கொழும் துவை ஊன்சோறும் – புறம் 113/2

கூழும் சோறும் கடைஇ ஊழின் – புறம் 160/20

சோறு
சோறு

உண்-மின் கள்ளே அடு-மின் சோறே/எறிக திற்றி ஏற்று-மின் புழுக்கே – பதி 18/1,2

ஏற்றுக உலையே ஆக்குக சோறே/கள்ளும் குறைபடல் ஓம்புக ஒள் இழை – புறம் 172/1,2

எ திசை செலினும் அ திசை சோறே – புறம் 206/13

பழம் சோற்று அமலை முனைஇ வரம்பில் – பெரும் 224

விருந்து உண்டு ஆனா பெரும் சோற்று அட்டில் – பட் 262

குருதி விதிர்த்த குவவு சோற்று குன்றோடு – பதி 88/11

பெரும் திரு நிலைஇய வீங்கு சோற்று அகல் மனை – கலி 83/1

தக்காளிச் சோறு
தக்காளிச் சோறு

பெரும் சோற்று அமலை நிற்ப நிரை கால் – அகம் 86/2

சுனை கொள் தீம் நீர் சோற்று உலை கூட்டும் – அகம் 169/7

கள் உடை பெரும் சோற்று எல் இமிழ் அன்ன – அகம் 266/14

பெரும் சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள் – அகம் 275/9

நெய்ம்மிதி முனைஇய கொழும் சோற்று ஆர்கை – அகம் 400/7

பெரும் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய் – புறம் 2/16

ஊன்_சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும் – புறம் 33/14

புது நெல் வெண் சோற்று கண்ணுறை ஆக – புறம் 61/5

வரையா பெரும் சோற்று முரி வாய் முற்றம் – புறம் 261/3

நிணம் பெருத்த கொழும் சோற்று இடை – புறம் 384/15

பழம் சோற்று புக வருந்தி – புறம் 395/5

சோறு
சோறு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *