சொல் பொருள்
(பெ) 1. போர், 2. போர்க்களம், 3. போர்க்களப்பூசல்,
சொல் பொருள் விளக்கம்
போர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
battle, battlefield, loud uproar in a battlefield
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நன்னன் நறு மா கொன்று ஞாட்பில் போக்கிய ஒன்றுமொழி கோசர் போல – குறு 73/2-4 நன்னன் என்பவனின் மணமுள்ள மா மரத்தை அழித்து, அவனையும் போரில் வீழ்த்திய சொல்தவறாக் கோசர் போல படு புலா கமழும் ஞாட்பில் துடி இகுத்து அரும் கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர் – அகம் 89/14,15 மிக்கபுலவு நாறும் போர்க்களத்தே, துடியினைத் தாழக்கொட்டி அரிய அணிகலன்களைத் திறையாகப் பெற்றுக்குவித்த பெரிய போர் விருப்பினையுடைய வென்றியினர் வெள்ளத் தானை அதிகன் கொன்று உவந்து ஒள்வாள்அமலை ஆடிய ஞாட்பின் – அகம் 142/13,14 வெள்ளம் போன்ற சேனையினையுடைய அதிகன் என்பானைக் கொன்று மகிழ்ந்து ஒள்வாள்அமலை என்னும் வெற்றிக்கூத்தை ஆடிய போர்க்களப்பூசலைப் போல
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்