Skip to content

களம்

களம்

களம் என்பதன் பொருள் இடம்

1. சொல் பொருள்

  1. இடம்(கூடுமிடம், ஒரு செயல் நடக்குமிடம்).
  2. போர்க்களம்- போர் நடக்குமிடம்.
  3. தேர்தல்களம்- தேர்தல் நடக்குமிடம்.
  4. ஆடுகளம்- விளையாடுமிடம், விளையாட்டு மைதானம்
  5. உடற்கூறியல் – உணவுக்குழாயின் ஒரு பகுதியைக் குறிக்கின்றது. இப்பகுதி உணவை தொண்டையில் இருந்து இரைப்பைக்கு கடத்தும் பகுதியாகும் (இலங்கை).
  6. கதிரடிக்கும் இடம்; களத்துமேடு;
  7. நடைபெறும் இடம்
  8. கருமை. களர்மண் என்பது கருநிறச் சேற்றுமண்; அளறு என்பதும் அது. காலாழ்களர் என்பது வள்ளுவம்.

2. சொல் பொருள் விளக்கம்

இச்சொல் ‘இடம்’ என்ற பொருள் தந்தாலும், இடம் என்ற சொல் ஒரு விரிவான பொருளில் நீளமும் அகலமும் உள்ள எதையும் குறிப்பது போல், இச்சொல் அனைத்து இடங்களிலும் பயன்படுவதில்லை. இச்சொல் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தான் பயன்படுத்தப்படுகிறது.

மணலுக்கு அடியில் உள்ள கருமண்ணைக் களம் என்பது நெல்லை வட்டார வழக்காகும். களம்=கருமை. களர்மண் என்பது கருநிறச் சேற்றுமண்; அளறு என்பதும் அது. காலாழ்களர் என்பது வள்ளுவம்.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Place, locality, open space, area, place for treading grain(threshing floor), Battle-field, site, ground, stadium, arena

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

வென்று அடு விறல் களம் பாடி தோள் பெயரா - திரு 55

கறுவு கொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே ஒரு முகம் - திரு 100

ஆடுகளம் சிலம்ப பாடி பல உடன் - திரு 245

களிறு களம் படுத்த பெரும் செய் ஆடவர் - நெடு 171

வென்று அடு விறல் களம் பாடி தோள் பெயரா - திரு 55

பலி பெறு வியன் களம் மலிய ஏற்றி - பெரும் 233

முரசு கொண்டு களம் வேட்ட - மது 129

வல்லோன் தைஇய வெறிகளம் கடுப்ப - மது 284

அணங்கு உறு மகளிர் ஆடுகளம் கடுப்ப - குறி 175

சாறு கொள் ஆங்கண் விழவுகளம் நந்தி - குறி 192

வெறிகளம் கடுக்கும் வியல் அறை-தோறும் - மலை 150

விழவுகளம் கமழும் உரவு நீர் சேர்ப்ப - நற் 19/5

விழவுகளம் பொலிய வந்து நின்றனளே - நற் 170/4

விழவு ஒழி வியன் களம் கடுப்ப தெறுவர - நற் 306/7

செம் களம் பட கொன்று அவுணர் தேய்த்த - குறு 1/1

நெஞ்சு மலி உவகையர் வியன் களம் வாழ்த்த - பதி 40/26

கண்டி நுண் கோல் கொண்டு களம் வாழ்த்தும் - பதி 43/27

உறல் உறு குருதி செருகளம் புலவ - பதி 86/1

களிறு போர் உற்ற களம் போல நாளும் - பரி 10/110

பொருகளம் போலும் தகைத்தே பரி கவரும் - பரி 11/60

புல்லென்ற களம் போல புலம்பு கொண்டு அமைவாளோ - கலி 5/11

கன்றிய தெவ்வர் கடந்து களம் கொள்ளும் - கலி 86/13

பொருகளம் போலும் தொழூஉ - கலி 104/59

பொருகளம் போலும் தொழூஉ - கலி 105/49

துளங்கு இமில் நல் ஏற்று இனம் பல களம் புகும் - கலி 106/9

களம் நன்கு இழைத்து கண்ணி சூட்டி - அகம் 22/8

பெரும் களம் தொகுத்த உழவர் போல - அகம் 30/8

கொன்று களம் வேட்ட ஞான்றை - அகம் 36/22

வெறி அயர் வியன் களம் பொற்ப வல்லோன் - அகம் 98/19

அடுகளம் பாய்ந்த தொடி சிதை மருப்பின் - அகம் 99/12

நன்நாள் வேங்கை வீ நன் களம் வரிப்ப - அகம் 133/4

நெடும் தேர் ஞிமிலியொடு பொருது களம் பட்டு என - அகம் 148/8

முருகு உறழ் முன்பொடு பொருது களம் சிவப்ப - அகம் 181/6

வெறி அயர் வியன் களம் கடுக்கும் - அகம் 182/17

படுகளம் காண்டல் செல்லான் சினம் சிறந்து - அகம் 208/13

களம் கொள் மள்ளரின் முழங்கும் அத்தம் - அகம் 227/11

ஆர் கலி விழவுகளம் கடுப்ப நாளும் - அகம் 232/11

வெறி அயர் வியன் களம் பொலிய ஏத்தி - அகம் 242/11

புலவு களம் துழைஇய துகள் வாய் கோடை - அகம் 249/14

குருதி செம் களம் புலவு அற வேங்கை - அகம் 268/3

நீர் சூழ் வியன் களம் பொலிய போர்பு அழித்து - அகம் 366/2

அணங்கு அயர் வியன் களம் பொலிய பைய - அகம் 382/6

தாள் களம் கொள கழல் பறைந்தன - புறம் 4/3

யூபம் நட்ட வியன் களம் பல-கொல் - புறம் 15/21

எறிந்து களம் படுத்த ஏந்து வாள் வலத்தர் - புறம் 19/12

சாறு கொண்ட களம் போல - புறம் 22/16

அடுகளம் வேட்ட அடு போர் செழிய - புறம் 26/11

ஆடுகளம் கடுக்கும் அக நாட்டையே - புறம் 28/14

களம் கொள் யானை கடு மான் பொறைய - புறம் 53/5

களம் கொளற்கு உரியோர் இன்றி தெறுவர - புறம் 62/12

புலா களம் செய்த கலாஅ தானையன் - புறம் 69/11

களம் புகு மல்லன் கடந்து அடு நிலையே - புறம் 80/9

போர் எதிர்ந்து என் ஐ போர்களம் புகினே - புறம் 84/3

களம் புகல் ஓம்பு-மின் தெவ்விர் போர் எதிர்ந்து - புறம் 87/1

பொருநரும் உளரோ நீ களம் புகினே - புறம் 90/13

களம் பட கடந்த கழல் தொடி தட கை - புறம் 91/2

களம் மலி நெல்லின் குப்பை வேண்டினும் - புறம் 171/9

களம் கொண்டு கனலும் கடுங்கண் யானை - புறம் 200/7

களம் மலி குப்பை காப்பு இல வைகவும் - புறம் 230/3

பொய்யா எழினி பொருது களம் சேர - புறம் 230/6

செம் களம் துழவுவோள் சிதைந்து வேறு ஆகிய - புறம் 278/7

கண நரியோடு கழுது களம் படுப்ப - புறம் 369/16

பூதம் காப்ப பொலிகளம் தழீஇ - புறம் 369/17

வெம் திறல் வியன் களம் பொலிக என்று ஏத்தி - புறம் 370/19

அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே - புறம் 370/27

குருதி துகள் ஆடிய களம் கிழவோயே - புறம் 371/27

புலவு களம் பொலிய வேட்டோய் நின் - புறம் 372/12

பொலிக அத்தை நின் பணை தயங்கு வியன் களம்

விளங்கு திணை வேந்தர் களம்-தொறும் சென்று - புறம் 373/27,28

அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே - புறம் 373/39

மனை களமரொடு களம் என்கோ - புறம் 387/25

விழவு அணி வியன் களம் அன்ன முற்றத்து - புறம் 390/4

ஆர்த்து களம் கொண்டோர் ஆர் அமர் அழுவத்து - சிலப்.புகார் 5/83

களம் கொள் யானை கவிழ் மணி நாவும் - சிலப்.வஞ்சி 26/201

கடும் படை மாக்களை கொன்று களம் குவித்து - சிலப்.வஞ்சி 26/212

வாள் ஏர் உழவன் மறகளம் வாழ்த்தி - சிலப்.வஞ்சி 26/234

அற களம் செய்தோன் ஊழி வாழ்க என - சிலப்.வஞ்சி 26/246

மர களம் முடித்த வாய் வாள் குட்டுவன் - சிலப்.வஞ்சி 26/247

கூற்று கண்ணோட அரிந்து களம் கொண்டோர் - சிலப்.வஞ்சி 27/40

எறிந்து களம் கொண்ட இயல் தேர் கொற்றம் - சிலப்.வஞ்சி 27/210

கொங்கர் செம் களம் வேட்டு - சிலப்.வஞ்சி 29/5

அறவோர் அவைகளம் அகலாது அணுகு-மின் - சிலப்.வஞ்சி 30/193

பிறவோர் அவைகளம் பிழைத்து பெயர்-மின் - சிலப்.வஞ்சி 30/194

5. பயன்பாடு

சூடுபிடிக்கும் தேர்தல் களம்; அரசியல் கட்சி தலைவர்கள் வேட்புமனு தாக்கல்

களப்பணி, கள நிலவரம், களத்துமேடு, களமிறங்கு, களமிறக்கு, ஆடுகளம், போர்க்களம், தேர்தல் களம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *