சொல் பொருள்
கடைந்து தீயை உண்டாக்கு, தீயை உண்டாக்கக் கடையப்படும் மூங்கில், தீக்கொள்ளி,
சொல் பொருள் விளக்கம்
கடைந்து தீயை உண்டாக்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
rub one stick on another for producing fire by friction, grating bamboo, stick with fire
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புல்லென் மாலை சிறு தீ ஞெலியும் கல்லா இடையன் போல – புறம் 331/4,5 புல்லென்ற மாலைப்போதில் சிறிய தீக்கடைகோலைக் கடைந்து தீயுண்டாக்கும் கல்லாத இடையன் போல ஞெலி கழை முழங்கு அழல் வயமா வெரூஉம் – ஐங் 307/1 ஒன்றையொன்று உரசிக்கொண்ட காய்ந்துபோன மூங்லிலில் பிடித்துக்கொண்ட நெருப்பைக் கண்டு வலிய புலி வெருளும் ஞெலியொடு பிடித்த வார் கோல் அம்பினர் – அகம் 239/4 தீக்கொள்ளியுடன் பிடித்துள்ள நீண்ட திரண்ட அம்பினராகி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்