சொல் பொருள்

(பெ) 1. அகலம், பரப்பு, 2. பெருமை, 3. வளைவு, 4. குளம்

சொல் பொருள் விளக்கம்

1. அகலம், பரப்பு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

width, expanse, greatness, curve, bend, tank

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பாடு இமிழ் பனி கடல் துழைஇ பெடையோடு
உடங்கு இரை தேரும் தடம் தாள் நாரை – நற் 91/3,4

ஓசை முழங்குகின்ற குளிர்ந்த கடலில் துழாவித் தன் பெடையோடு சேர்ந்து இரையைத் தேடும் அகன்ற பாதங்களையுடைய நாரை

தடம் கடல் வாயில் உண்டு சில் நீர் என
——————-
கார் எதிர்ந்தன்றால் – நற் 115/4-7

பரந்த கடலின் நீரை வாயினால் எடுத்துக்கொண்டு அதனைச் சிறிதளவு நீரே என்னும்படி,
—————————-
கார்காலம் எதிர்ப்பட்டது

தன் நாற்றம் மீது தடம் பொழில் தான் யாற்று
வெம் நாற்று வேசனை நாற்றம் குதுகுதுப்ப – பரி 20/12,13

பெரிய பொழில்களின் மலர்களின் மணத்திற்கும் மேலாக, ஆற்றின் வெம்மையான மணலில் புதுநீர் பரவுவதால் புதிதாய் புகுந்து பரவும் நாற்றம் குளிர்ந்த வாடையாய் மாற

தடம் கோட்டு ஆமான் மடங்கல் மா நிரை – நற் 57/1

வளைந்த கொம்புகளையுடைய காட்டுப்பசு, சிங்கம் முதலான விலங்குகளின் கூட்டம்

முகை வாய்த்த தடம் போலும் இளமையும் நிலையுமோ – கலி 17/16

மொட்டுக்களைப் பெற்ற குளம் நாளும் வற்றுவதைப் போல இவளின் இளமையும் வற்றாமல் நிற்குமோ?

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.