Skip to content

சொல் பொருள்

தடவல் – இல்லாமை, தடவை

சொல் பொருள் விளக்கம்

பொருள் நிரம்ப இருந்தால் அள்ளிக் கொள்ளலாம். குறைவாக இருந்தால் எடுத்துக் கொள்ளலாம்; தேடிப்பிடித்து எடுக்கும் அளவில் இருந்தால் தடவித்தான் எடுக்க வேண்டி வரும். அவ்வாறு தடவி எடுக்கும் அளவு சுருங்கிப் போவதே ‘தடவல்’ எனப்படுவதாம். “இப்பொழுது தடவலாக இருக்கிறது; பிறகு பார்க்கலாம்” என்பதில் இல்லாமைக் குறிப்புண்மை அறிக. சோறுதடவல், கறிதடவல் என்பதும் இது. இனித் ‘தடவை’ என்பதும் ‘தடவல்’ என வழங்கும். மூன்று தடவல் கேட்டான் என்றால் மூன்றுமுறை கேட்டான் என்பதாம்.

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.