சொல் பொருள்
தடவுதல் – ஒன்றில் ஒன்று படுமாறு தழுவிப் பரப்புதல்.
நீவுதல் – தடவியதை அழுந்தத் தேய்த்து விடுதல்.
சொல் பொருள் விளக்கம்
தடவுதல் முற்படு செயல்; நீவுதல் பிற்படு செயல். ஒரு களிம்பைக் காலிலோ கையிலோ தொட்டு வைத்துப் பரவச் செய்தல் தடவுதலாம். அதனை ஏற்ற வண்ணம் மேலும் கீழும் பக்கங்களிலும் தசை நிலைக்கு ஏற்றவாறு அழுத்தித் தேய்த்து உருவுதல் நீவுதலாம்.
தடவித் தடவி நீவுதலும், நீவி நீவித் தடவுதலும் வழக்காறு. ஒற்றடம் வைத்து நீவுதலும் உண்டு.அங்குத் தடவுதல் இல்லையாம். “கால் வலிக்கிறது இக்களிம்பைக் கொஞ்சம் தடவி நீவுங்கள்” என்பது நடைமுறை. பாறுமயிர் குடுமிக்கு எண்ணெய் நீவுதலைச் சுட்டும் புறம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்