Skip to content

சொல் பொருள்

(வி.எ) தடவி என்பதன் திரிபு, 1. வருடி, 2. மறைத்து, 3. திரண்டு

சொல் பொருள் விளக்கம்

தடவி என்பதன் திரிபு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

stroking, hiding, be rotund

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கொம்மை வரு முலை வெம்மையில் தடைஇ
கரும் கோட்டு சீறியாழ் பண்ணு முறை நிறுப்ப – நெடு 69,70

பெரிய எழுகின்ற முலையின் வெப்பத்தால் வருடி,
கரிய தண்டினையுடைய சிறுயாழைப் பண் நிற்கும் முறையிலே நிறுத்த

தழையும் தாரும் தந்தனன் இவன் என
இழை அணி ஆயமொடு தகு நாண் தடைஇ
தைஇ திங்கள் தண் கயம் படியும் – நற் 80/5-7

உடுக்கும் தழையும், சூடும் மாலையும் தந்தான் இவன் என்று
அணிகலன் அணிந்த தோழியரோடு தகுந்த நாணத்தை மறைத்துக்கொண்டு
தைத்திங்களில் குளிர்ந்த குளத்துநீரில் நீராடும்

முறம் செவி யானை தட கையின் தடைஇ
இறைஞ்சிய குரல பைம் தாள் செந்தினை – நற் 376/1,2

முறம் போன்ற செவியினைக் கொண்ட யானையின் நீண்ட கையினைப் போல, பருத்து வளர்ந்து
தலைசாய்த்த கதிர்களைக் கொண்ட பசிய தாள்களைக் கொண்ட செந்தினையை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *