தட்டிக் கொட்டி

சொல் பொருள்

தட்டுதல் – மண் கலங்களைக் கையால் தட்டிப் பார்த்தல்.
கொட்டுதல் – தட்டிப் பார்த்தப் பின்னர், விரலை மடித்துக் கொட்டிப் பார்த்தல்.

சொல் பொருள் விளக்கம்

தட்டிக் கொட்டிப் பாராமல் மண்கலங்களை வாங்குவதில்லை. அவ்வழக்கம் வெண்கலக் கலங்களுக்கும் வளர்ந்தது. பின்னர் ஒருவரை ஏதாவது கேட்டால் ‘ என்னைத் தட்டிக் கொட்டிப் பார்க்கிறாயா?’ என்னும் அளவுக்கும் சென்றுள்ளது.

தட்டுதல், ஓட்டை, உடைவு, கீறலைக் காண உதவும்.

கொட்டுதல், வேக்காட்டை அறிய உதவும். தட்டிக் கொட்டுதல் ‘ஆய்வு’ நோக்கினது ஆதலால் ஆய்வுப் பொருள் தட்டிக் கொட்டுதலுக்கு வந்தது.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.