சொல் பொருள்
தட்டு – திருநீறு, சூடன் வைக்கும் சிறுத் தட்டு.
தாம்பாளம் – தேங்காய் பழம் வெற்றிலை வைக்கும் பெருந்தட்டு.
சொல் பொருள் விளக்கம்
தாம்பாளத்தின் உள்ளே தட்டு அடங்கும். கோயில் வழிபாட்டுக்குத் தாம்பாளம், தட்டு, இரண்டும் கொண்டு செல்வது வழக்கம். அகலம் பெரிது சிறிது என்பது மட்டுமில்லாமல் அமைப்பு முறையிலும் இரண்டற்கும் வேறுபாடு உண்டு. இனித் தாம்பாளத்தைப் பெருந்தட்டு என்பதும் உண்டு. தராசுத் தட்டு, இட்லித் தட்டு, உண்கலத்தட்டு எனப்பிற தட்டுகளும் உள.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்