Skip to content

சொல் பொருள் விளக்கம்

(பெ) 1. சோளம், கரும்பு, மூங்கில் போன்றவற்றின் நடுப்பகுதி, 2. கிளிகடிகருவி, 3. கரடிகை என்னும் பறை

கம்பு, சோளம் முதலியவற்றின் அடி

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

stalk, stubble, A mechanism made of split bamboo for scaring away parrots from grain fields, a kind of drum

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கண் விடுபு உடையூஉ தட்டை கவின் அழிந்து – மது 305

மூங்கிலின் கணுக்கள் திறக்கப்பட்டு உடைவதனால் தட்டை அழகு அழிந்து

ஒலி கழை தட்டை புடையுநர் புனம்-தொறும்
கிளி கடி மகளிர் விளி படு பூசல் – மலை 328,329

ஒலிக்கும் மூங்கில் தட்டைகளை மீண்டும் மீண்டும் அடிப்பவராய், புனங்கள்தோறும்
கிளியை விரட்டுகின்ற பெண்களின் கூச்சலால் எழும் ஆரவாரமும்;

இட்டு வாய் சுனைய பகு வாய் தேரை
தட்டை_பறையின் கறங்கும் நாடன் – குறு 193/2,3

சிறிய வாயையுடைய சுனையில் உள்ள பிளந்த வாயையுடைய தேரைகள்
தட்டைப் பறையைப் போல ஒலிக்கும் நாட்டையுடைய தலைவன்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *