சொல் பொருள் விளக்கம்
(பெ) 1. சோளம், கரும்பு, மூங்கில் போன்றவற்றின் நடுப்பகுதி, 2. கிளிகடிகருவி, 3. கரடிகை என்னும் பறை
கம்பு, சோளம் முதலியவற்றின் அடி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
stalk, stubble, A mechanism made of split bamboo for scaring away parrots from grain fields, a kind of drum
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கண் விடுபு உடையூஉ தட்டை கவின் அழிந்து – மது 305 மூங்கிலின் கணுக்கள் திறக்கப்பட்டு உடைவதனால் தட்டை அழகு அழிந்து ஒலி கழை தட்டை புடையுநர் புனம்-தொறும் கிளி கடி மகளிர் விளி படு பூசல் – மலை 328,329 ஒலிக்கும் மூங்கில் தட்டைகளை மீண்டும் மீண்டும் அடிப்பவராய், புனங்கள்தோறும் கிளியை விரட்டுகின்ற பெண்களின் கூச்சலால் எழும் ஆரவாரமும்; இட்டு வாய் சுனைய பகு வாய் தேரை தட்டை_பறையின் கறங்கும் நாடன் – குறு 193/2,3 சிறிய வாயையுடைய சுனையில் உள்ள பிளந்த வாயையுடைய தேரைகள் தட்டைப் பறையைப் போல ஒலிக்கும் நாட்டையுடைய தலைவன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்