Skip to content

சொல் பொருள்

(வி.எ) 1. தடுக்க, 2. தணிய

சொல் பொருள் விளக்கம்

1. தடுக்க

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

to stop, to prevent, be alleviated

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்
யானே பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி – நற் 94/2,3

அன்பான மொழிகளைக் கூறுதல் ஆண்மகனுக்குச் சிறந்த பண்பாகும்;
நானோ எனது பெண்மையுணர்வு தடுக்க அந்நோயை வெளிப்படுத்தாதவாறு தாங்குகிறேன்;

ஒளி பூத்த நுதலாரோடு ஓர் அணி பொலிந்த நின்
களி தட்ப வந்த இ கவின் காண இயைந்ததை – கலி 66/19,20

ஒளிவீசும் நெற்றியினராகிய பரத்தையருடன் ஒரே ஆடையில் மகிழ்ந்திருந்த உன்
காம வேட்கை சிறிது தணிய, இங்கு வந்த காட்சியின் அழகைக் காண் நேர்ந்தது.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *