Skip to content

தலைகாட்டாமை

சொல் பொருள்

தலைகாட்டாமை – முன்வராமை

சொல் பொருள் விளக்கம்

தலை என்பது உறுப்பைக் குறியாமல், உறுப்புடையானைக் குறிப்பதாம். தலைக்கு இரண்டு என்றால் ஆளுக்கு இரண்டு என்பது போன்ற வழக்கு உடையதாகும் இது. பல நாள் பார்க்காதிருந்த ஒருவரைப் பார்க்க நேர்ந்தால் “தலையைக் காணவில்லையே; வெளியூர் போயிருந்தீர்களா?” என வினவுதல் பெரும்பான்மை. “நீ செய்த செயலுக்கு என் முன் தலைகாட்ட எப்படித்தான் முடிகிறது?” என்று வருந்துவதோ, “தலைகாட்டினாயோ பார்” என எச்சரிப்பதோ வழக்கில் உள்ளவையே.

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *