தலைக்கட்டல்

சொல் பொருள்

தலைக்கட்டல் – சீர் செய்தல், சரி செய்தல்

சொல் பொருள் விளக்கம்

தலைக்கட்டல் என்பது தலையைக் கட்டுதல் என்னும் பொருளைக் குறியாமல் சீர் செய்தல், சரி செய்தல் என்னும் பொருளில் வருவது உண்டு. “நீங்கள் தலைக்கட்டாவிட்டால் பெரிய பெரிய விளைவுகள் எல்லாம் ஏற்பட்டிருக்கும்” என்பதில் இப்பொருள் உண்மை விளங்கும். தலைப்படுதல் என்பது முன்னின்று செய்தலையும், தலைக் கட்டல் என்பது முன்னின்று காத்தலையும் குறித்தலை நோக்கத் ‘தலை’ என்பதன் முதன்மை தலைமைப் பொருள்கள் விளங்கும்.

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.